சென்னைவாசிகளுக்கு பயங்கர குஷி.. துள்ளி மகிழும் வாகன ஓட்டிகள்.. சென்னை மாநகராட்சி சர்ப்ரைஸ்ஸை பாருங்க
சென்னை: சென்னையில் வாகன நிறுத்த கட்டணங்கள் குறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிப்பினையடுத்து, காவல்துறை அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் தரப்பட்டு வருகின்றன.. மற்றொருபுறம் திடீர் சோதனைகளும் வாகன ஓட்டிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாகனங்கள்: தமிழகத்தில், உரிமம் இல்லாத வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதாக சமீபத்தில்கூட புகார்கள் வந்தன.. அதனால், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம்கூட, அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்..

அப்போது வாகனங்களில் அதிக பாரம் ஏற்றியது, உரிமம் புதுப்பிக்காதது, உரிமம் முறைகேடு உள்ளிட்ட விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வாகனங்களுக்கு, எல்லாம் 28,49,315 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.
ஒரே நாளில் அதிரடி: இதைத்தவிர, 2 கோடியே, 11 லட்சத்து, 31,400 ரூபாய் வரியாக பெறப்பட்டு, இதற்கான ரசீதும் தரப்பட்டுள்ளது.. ஆக மொத்தம் 2.39 கோடி ரூபாய் அபராதம் மற்றும் வரி பெறப்பட உள்ளது. இதில் சென்னையில் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை, போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும், ஏராளமான வியூகங்களை சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், சென்னை : 'வாகன நிறுத்தத்திற்கு, மாநகராட்சி நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதியப்படும் என்று மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி: இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான இடங்களில், தனியார் சேவை நிறுவனத்தின் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, தியாகராய நகரில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டணமாக 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 எனவும், 2 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 எனவும், 2 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புகார் தரலாம்: மேலும், பாண்டி பஜார் வாகன நிறுத்தத்திற்கு சிறப்பு கட்டணமாக 4 சக்கர வாகனங்னளுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.60 எனவும், 2 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.15 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மூலம் அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டண வரம்பை விட அதிகமாக கட்டணத்தை தனியார் சேவை நிறுவனங்கள் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும்,@chennaicorp என்ற எக்ஸ் வலைதளத்திலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலும் புகார் பதிவு செய்யலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி பேஸ்புக் பக்கத்தில், இது தொடர்பான விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.. அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் வாயிலாக, அந்தந்த காவல் நிலையங்களுக்கு அறிவிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்ல, இந்த உத்தரவின்படி, போலீசார், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்தார்கள். அதற்கு பிறகு, ஒப்பந்ததாரர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, பிறகு துறை ரீதியான நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிரடி மாநகராட்சி: அதேபோல, சென்னை மாநகராட்சியில் நீண்டகாலமாக கேட்பாரற்று மக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதலே, இது தொடர்பான பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக இறங்கி வருகிறார்கள்.
சென்னை தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூறாக, கேட்பாரற்று கிடந்த வாகனங்களை ஏற்கனவே ஊழியர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்திருந்தனர். அதுமட்டுமல்ல, மோட்டார் வாகன சட்டம் 380ன்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 128ன்படியும் இந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியின் இபோன்ற தொடர் அதிரடிகளால், கேட்பாரற்று வாகனங்களை நிறுத்தும் போக்கும் குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications