Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்காலத்தில் இந்த வேலைக்குத்தான் பலர் சேர போறாங்க.. இந்திய போக்குவரத்தே மாற போகுது.. அரசின் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) இந்தியாவில் பைக் டாக்சிகளை விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது இந்தியாவில் பைக் டாக்சிகள் சட்டத்திற்கு எதிரானவை. அதாவது நீங்கள் ஒரு பைக் டாக்சியில் செல்கிறீர்கள் என்றால்.. சட்டப்படி அது தவறு. போலீஸ் பிடித்தால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கலாம்.

Bike Taxis will be a Legal thing In India soon: MoRTH’s Latest Advisory Adds Clarity

இந்த நிலையில் மோட்டார் வாகனங்கள் (MV) சட்டம், 1988ன் படி, ஒப்பந்த வண்டிகளின் வரையறையின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் வரும். இதை பயன்படுத்தி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) இந்தியாவில் பைக் டாக்சிகளை விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பைக் டாக்ஸி அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் என்ற ஆலோசனையை மத்திய அரசு வழங்க உள்ளதாம். பைக் டாக்சி தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் தற்போது உள்ள சூழ்நிலையை மாற்ற முடியும். தற்போது ஒழுங்குமுறை இன்றி ரகசியமாக பைக் டாக்சி ஓட்டப்படுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும், இது வெளிப்படையாக பைக் டாக்சி தொழிலில் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கலாம்.

அதேபோல் பலர் இந்த வேலைக்கு மாறும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த துறை வருமானம் முறையாக வருவதாக விதிகள் கொண்டு வரப்படலாம். இந்த நடவடிக்கையானது இந்தியாவில் நிலவும் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்க்கும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு பயணத்தை எளிதாக்கும். குறிப்பாக அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் மிகவும் மலிவு விலையில் பயணிக்கும் வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விதி மீறல் தொடர்பான சிக்கல்கள் காரணமாக பைக் டாக்சி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாமல் பாதுகாக்க இந்த புதிய விதி உதவும்.

பெங்களூர், சென்னை போன்ற முக்கிய நகரங்கள் இந்த சேவையை அதிகம் பயன்படுத்துகின்றன. பலருக்கு மாற்று வருமான ஆதாரமாகவும், மற்றவர்களுக்கு மிகவும் மலிவு மற்றும் விரைவான போக்குவரத்து சேவைகளுக்கான விருப்பமாகவும் செயல்படுகிறது. Rapido இன் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி, இந்த பரிந்துரைக்கு பாராட்டு தெரிவித்தார், "அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு செயலாக்கத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.

60 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு பைக் டாக்ஸி துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் Rapido, இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பைக் டாக்ஸி சவாரிகளை மேற்கொள்கிறது. பைக் டாக்ஸி துறையில் மற்றொரு முக்கிய நிறுவனமாக உபெர் மோட்டோ உள்ளது.

தற்போது இந்தியாவில் பைக் டாக்சிகள் சட்டத்திற்கு எதிரானவை. அதாவது நீங்கள் ஒரு பைக் டாக்சியில் செல்கிறீர்கள் என்றால்.. சட்டப்படி அது தவறு. போலீஸ் பிடித்தால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கலாம். இந்த நிலையில் விரைவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) இந்தியாவில் பைக் டாக்சிகளை விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+