செந்தில் பாலாஜி டூ கோவி செழியன் வரை.. நாளை அமைச்சராகும் 4 பேர் யார் யார்? முழு பயோ டேட்டா
சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக நாளை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் நாளை நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழா என்பது நாளை மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி இன்று இரவில் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதன்படி நாளை மாலை 3.30 மணிக்கு தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை அமைச்சரை மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் 4 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைய உள்ளனர்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த பொறுப்புடன் கூடுதல் இலாகாக்களுடன் துணை முதல்வராக உள்ளார். செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி: இவர் கரூர் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார்.2021ல் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். செந்தில் பாலாஜி முன்னதாக அதிமுக, அமமுவில் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2018 ல் தான் திமுகவில் இணைந்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது தான் அவர் போக்குவர்தது துறையில் பணி வாங்கி தருவதாக பணம் வசூலித்து சிக்கலில் சிக்கினார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை உள்ளே நுழைந்தது. இந்த வழக்கில் தான் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியை இழந்தார்.
கோவி செழியன்: இவர் திமுகவில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறார். திமுகவின் தலைமை கழக பேச்சாளர், மாணவரணி இணை செயலாளராக செயல்பட்டு வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலையும், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும் படித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், முதுகலை சமூகவியல் ஆகியவற்றை முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தமிழக அரசு தலைமைக் கொறடாவாக செயல்பட்டு வரும் நிலையில் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆர்.ராஜேந்திரன்: இவர் நீண்ட காலமாக திமுகவில் செயல்பட்டு வருகிறார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 1985ல் கருணாநிதியால் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளராகவும், 1992ல் திமுக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல் திமுக மாணவரணியின் துணை செயலாளராகவும் செயல்பட்டு இருந்தார்.

கடந்த 2001ல் ஓமலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2006ல் பனமரத்துப்பட்டியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2011ல் சேலம் மேற்கு தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் 2016, 2021ம் ஆண்டுகளில் சேலம் வடக்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆவடி நாசர்: இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர். எஸ்எஸ்எல்சி வரை படித்துள்ளார். கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர், கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். 2001- 2006 மற்றும் 2011 -2016 ஆகிய 10ஆண்டுகளில் ஆவடி நகரமன்ற தலைவராக பதவி வகித்துள்ளார்.

4 முறை ஆவடி நகர செயலாளராகவும், ஒருங்கிணைந்த திருவள்ளூர் -காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், சென்னை- காஞ்சிபுரம் மாவட்ட பால் கூட்டுறவு சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். 2021ல் பால்வளத்துறை அமைச்சராக செயல்பட்டார். அப்போது சர்ச்சையில் சிக்கியதால் அதன்பிறகு பதவி பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications