கேஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்.. ஆதார் கார்டு உடன் உடனே போங்க.. அதிகாரிகள் தந்த விளக்கம்
சென்னை: கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் பயோமெட்ரிக் செய்ய அறிவுறுத்தி வருகின்றன கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள். கே.ஒய்.சி. செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவது நிறுத்தப்படும் என்ற தகவலால், கேஸ் ஏஜென்சிகளுக்கு ஆதார் கார்டு உடன் மக்கள் சென்று வருகிறார்கள். ஆனால் அதிகாரிகளோ, பயோமெட்ரிக் இல்லை என்றால் கேஸ் சிலிண்டர் எதுவும் நிறுத்தப்படாது என்றும் அதேநேரம் கேஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம் என்றும் கூறியுள்ளார்கள்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

பயோமெட்ரிக் ஏன்
இதன்படி கேஸ் சிலிண்டரை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுக்கவும், அரசுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்கவும், மானியம் சரியாக செல்வதை உறுதி செய்யவும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வாங்க வேண்டும் என்று கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எப்படி ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டதோ, அதுபோலவே சிலிண்டர் வாங்க பயோ மெட்ரிக்கை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.
கேஸ் ஏஜென்சிக்கு படையெடுப்பு
இதன்படி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆதார் பயோமெட்ரிக்கை தங்களுக்கான கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால் கேஸ் சிலிண்டர் ஊழியர்களே வீடு, வீடாக இதுகுறித்து அறிவுறுத்தி வருகிறார்கள். இதனிடேய கே சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பயோமெட்ரிக்கை வழங்காவிட்டால் அவர்களுக்கு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற உறுதி செய்யப்படாத தகவல் பரவியதால், ஏராளமானவர்கள், கேஸ் ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
சிறப்பு முகாம்
இதனால் தற்போது ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக கேஸ் ஏஜென்சிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக முந்தைய கேஸ் பில், ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்களது ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்ட பிறகு, ஆதார் கேமரா மூலம் கருவிழி போட்டோ எடுக்கிறார்கள்.
ஆன்லைனில் பதிவு
ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ள முடியும், இதற்காக அவர்கள் எல்.பி.ஜி. செயலியை டவுன்லோடு செய்து, அந்த செயலிக்குள்ளேயே பயோமெட்ரிக் பதிவு செய்யலாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யாதவர்களுக்கு சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருவது உண்மையில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
சிலிண்டர் நிறுத்தப்படாது
மோசடிகளை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கேஸ் சிலிண்டர் வினியோக முறையில் பயோமெட்ரிக்கு முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று கூறிய அதிகாரிகள், சிலிண்டர் வைத்திருக்கும் நுகர்வோர்கள் விரைவாக தங்களது பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். எனினும் கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது என்றும் மோசடி இல்லாத சிலிண்டர் வினியோகத்திற்கு இது கட்டாயம் என்றும் கூறினார்கள். பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்வதற்கு அரசு எந்தவிதமான கால நிர்ணயமும் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications