“சீப்” அரசியல்.. பாஜகவினரை மிரட்டுறாங்க! நிர்மல் குமார் “வொர்தே” இல்ல - அலிஷாவுக்கு வந்துச்சே கோபம்
"நிர்மல் குமாரின் தரம் என்னவென்று 2 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி தெரிந்துகொள்வார்.”
சென்னை: தன்னை கட்சியை விட்டு விலக சொல்லி கட்டாயப்படுத்தியதாக சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் துணை தலைவர் ஆர்.கே.சரவணன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், நிர்மல் குமார் இழிவான மற்றும் மலிவான அரசியலை செய்து வருவதாக தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு பாஜக ஐடி விங்கின் தலைவராக இருந்து வரும் நிர்மல் குமார் கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது தொடர்ந்து விவாத பொருளாக இருந்து வருகிறது.
அதை தொடர்ந்து அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தது அதிமுக - பாஜக இடையிலான கூட்டணிக்கே நெருக்கடியாக மாறி இருக்கிறது.

தொடரும் கட்சி தாவல்
நிர்மல் குமார் ராஜினாமா செய்த மறுநாளே தமிழ்நாடு பாஜக ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணனும் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி பாஜகவிலிருந்து விலகினார். அதை தொடர்ந்து நிர்மல் குமார் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் 3 பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

13 விலகல்?
இந்த நிலையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் தலைவர் அன்பரசு, தனது தலைமையில் மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என 13 பேர் விலகி இருப்பதாக அவர்கள் நேற்று சமூக வலைதளங்களில் ஒரு அறிக்கையை வெளியிடவே பலருக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அன்பரசு குற்றச்சாட்டு
இதுகுறித்து அன்பரசு வெளியிட்ட அறிக்கையில், "கட்சியில் சில காலமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது.

பதவி ஆசை
ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான். பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.

சுயநலம்
என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை.

திமுகவில் இணைவேனா
துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரமாகவே இதை செய்கிறேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.

நிர்மல் குமார் வழியில்
என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் திரு C.T.R நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது." என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆர்.கே.சரவணன் மறுப்பு
இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக கையெழுத்திட்ட சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் துணை தலைவர் ஆர்.கே.சரவணன், "மாவட்டத் தலைவர் அன்பரசு காலை 5 நிமிடம் வர முடியுமா என்று என்னை அழைத்தார். அங்கு கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்தார்கள். சமூக வலைதளங்களில் நான் விலகிவிட்டதாக பரப்பி வருகிறார்கள்.

பாஜகவில்தான் இருக்கிறேன்
பாஜகவில்தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நான் பாஜகவில் 2012 ஆம் ஆண்டில் இருந்து இருக்கிறேன். அண்ணாமலை அண்ணன் பின்னால்தான் பயணிக்க வேண்டும் என்று இன்றும் நான் விரும்புகிறேன். ஐடி விங் மாநில தலைவர் நிர்மல்குமார் போய்விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோல் செய்கிறார்கள்." என்றார்.
|
அலிஷா அப்துல்லா ட்வீட்
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "பாஜக நிர்வாகிகளை மிரட்டி அதிமுகவில் இணைய சொல்லி மலிவான மற்றும் இழிவான அரசியலை நிர்மல் குமார் செய்து வருகிறார். அவரது தரம் என்னவென்று 2 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி தெரிந்துகொள்வார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications