திமுக ஆதரவு அலையில் தூக்கி வீசப்பட்ட பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள்.. பல இடங்களில் டெபாசிட் காலி!
சென்னை: தமிழ்நாட்டில் இந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு எழுந்த ஆதரவான அலையால் எதிர்த்து போட்டியிட்ட பல கட்சிகளின் டெபாசிட் காலியானது.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக கூட்டணிக்கும் - இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி தொடர்ந்து வந்தது. இறுதியில், பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதியை அடைய முடியாமல் 240 தொகுதியோடு பாஜக தனது வெற்றி கணக்கை நிறுத்திக்கொண்டது. பாஜகவின் என்டிஏ கூட்டணி மொத்தமாக 292 தொகுதிகளைப் பிடித்தது.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளையும் வென்றது. திமுகவின் இந்த அமோக் வெற்றியால் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் டெபாசிட் இழந்துள்ளது. தொகுதியில் பதிவான ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு ஓட்டுகள் பெற்றால் மட்டுமே வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர் செலுத்திய டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும்.
லோக்சபா தேர்தலை பொறுத்தவரை பொது வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி. வேட்பாளர்கள் 12 ஆயிரத்து 500 ரூபாயும் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். இதில் குறிப்பிட்ட வாக்குகளை பெறாத கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்.
அந்த வகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதுடன் 8 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. தென்சென்னை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், தேனி தொகுதியில் நாராயணசாமி, ராமநாதபுரம் தொகுதியில் ஜெயபெருமாள், தூத்துக்குடி தொகுதியில் சிவசாமி வேலுமணி, திருநெல்வேலி தொகுதியில் ஜான்சி ராணி , வேலூர் தொகுதியில் எஸ்.பசுபதி, கன்னியாகுமரி தொகுதியில் பசிலியன் நாசரெத் , புதுச்சேரி தொகுதியில் தமிழ்வேந்தன் ஆகியோர் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி 11 இடங்களில் டெபாசிட் காலியாகியுள்ளது. பாஜக கூட்டணி 22 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. பாமக 10 தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 6 இடத்தில் டெபாசிட் இழந்துள்ளது. தமாகா 3 இடங்களிலும் டெபாசிட் காலியானது. ஐஜேகே கட்சி 1 தொகுதிகளிலும், அமமுக 1 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளன.
திருவள்ளூர் தொகுதியில் பொன்.பாலகணபதி, திருவண்ணாமலை தொகுதியில் அஸ்வத்தாமன், வட சென்னை பால் கனகராஜ் , கரூர் தொகுதியில் வி.வி.செந்தில் நாதன், விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார், நாமக்கல் தொகுதியில் கே.பி.ராமலிங்கம், சிதம்பரம் தொகுதியில் கார்த்தியாயினி, திருப்பூர் தொகுதியில் எ.பி.முருகானந்தம், நாகப்பட்டினம் தொகுதியில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது. அதே நேரத்தில் 2 இடங்களில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை 4 ஆம் இடத்துக்கு தள்ளிவிட்டது. 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3 வது இடம் பிடித்துள்ளது. 9 தொகுதிகளில் 3ஆம் இடத்திற்கும், 3 தொகுதிகளில் 4ஆம் இடத்திற்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications