2 கட்ட தேர்தலிலும் பாஜக பெயில்.. தாமரை கேம்பில் தொற்றிய பிரஷர்.. சீக்ரெட்டை போட்டு உடைச்சிட்டாரே
சென்னை: இரண்டு கட்ட தேர்தல்களிலும் பாஜக கடுமையான பின்னடைவை அடைந்து உள்ளது. பாஜக அங்கே fail ஆகி உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் பற்றி மேடைக்கு மேடை பேசுவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் வாக்குறுதி குறித்தோ, 10 ஆண்டுகள் சாதனை பற்றியோ பேசாமல் மோடி திடீரென இஸ்லாமியர்களுக்கு எதிரான புதிய பிரச்சார வியூகத்தை கையில் எடுத்து இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொன்னார்?: ராஜஸ்தானில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
கடுமையான சர்ச்சை: இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள், என்றெல்லாம் மோடி பேசினார்.
மோடி பேச்சு காரணம்: இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஓபிசி இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது. ஓபிசி மத்தியில் காங்கிரஸ் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பாஜக சறுக்க தொடங்கி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் இது பாஜகவிற்கு எதிராக மாறி உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அல்லது அவர்களின் எக்சிட் போல் ரிப்போர்ட் தெரிவித்து இருக்கலாம். அதனால்தான் பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி என்ற கோஷத்தை நிறுத்திவிட்டனர்.
இதனால் மோடி தனது பேச்சின் ஸ்டைலை மாற்றிவிட்டார். இந்துக்களின் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது என்றெல்லாம் மோடி பேசுவதற்கு காரணம் இந்த ரிப்போர்ட்தான்.
முதல் கட்ட தேர்தலில் பாஜகவிற்கு தோல்வி ஏற்பட்டு உள்ளது. இந்தி ஹார்ட் லேண்டிலேயே பாஜகவிற்கு எதிராக நிலைமை மாறி உள்ளது. ராஜபுத்திரர்கள் பாஜகவிற்கு எதிராக கடுமையாக உள்ளனர். இதனால் ராஜபுத்திரர்கள் இருக்கும் பகுதிகளில் பாஜகவினர் செல்லவே முடியவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் பற்றி பேச வேண்டிய கட்டாய நிலையில் மோடி இருக்கிறார்.
ஆனால் இரண்டாம் கட்ட தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகாவில் பாஜகவிற்கு பெரிய அளவில் தோல்வியே மிஞ்சும்., அதனால்தான் பாஜக கேம்பில் பதற்றம், உச்சம் உள்ளது. இரண்டு கட்ட தேர்தல்களிலும் பாஜக கடுமையான பின்னடைவை அடைந்து உள்ளது. பாஜக அங்கே fail ஆகி உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications