பெண் மீது கார் மோதிய விவகாரம்- கோவையில் இந்து முன்னணி- பாஜகவினரிடையே பயங்கர மோதல்- அரிவாள் வெட்டு!
கோவையில் இந்து முன்னணி- பாஜக பயங்கர மோதல்!
கோவை: கோவையில் பெண் ஒருவர் மீது கார் மோதிய விவகாரத்தில் இந்துத்துவா அமைப்புகளான இந்து முன்னணி மற்றும் பாஜகவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்து முன்னணியை சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பாஜகவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் இந்துத்துவா அமைப்புகளிடையே மோதல்கள் அவ்வப்போது வெடித்து கொலைகளில் முடிந்திருக்கின்றன. இதில் பல கொலைகள் அரசியல் ரீதியாக வேறு கோணத்திலும் திசை திருப்பப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அந்த வாகனம் மீது கார் மோதியது. காரை ஓட்டி வந்த நபருக்கு ஆதரவாக இந்து முன்னணியில் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு ஆதரவாக பாஜகவினரும் மல்லுக்கட்டியுள்ளனர். இந்த மோதலில் இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த அசோக், ராசு, சண்முக சுந்தரம் , சச்சு உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய பாஜகவினரை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்துத்துவா அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள் வெட்டு வரை நிகழ்ந்திருக்கும் இச்சம்பவம் கோவையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications