திமுக அமைச்சருக்கு அருகே போன அண்ணாமலை.. வட்ட வட்டமாக அமர்ந்து.. திணறிய திருப்பூர்.. என்ன நடந்தது?
சென்னை: திருப்பூரில் நடந்த திருமண விழா ஒன்றில் தமிழ்நாடு அமைச்சர் ஒருவரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் ஏகப்பட்ட மாற்றங்கள்.. திருப்பங்கள் நடந்தப்படி இருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில், ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார்.

சமீபத்தில் பிஎல் சந்தோஷ் உடனும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனைகளில் தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தென் சென்னை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது . அண்ணாமலை இதை வெளிப்டையாகவே தொகுதி குறிப்பிடாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
நடைப்பயணம்: இதை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இடையில் பிரேக் எடுத்திருந்த அண்ணாமலை தற்போது இரண்டாம் கட்டமாக நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது குன்னம் பகுதியில் அவர் நடைபயணம் செய்து வருகிறார். சென்னையில் முடியும் இந்த நடைப்பயணத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வர் என்று செய்திகள் வருகின்றனர். இந்த பயணத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அமைச்சர்களை, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இன்று கூட தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
போராட்டம் அறிவிப்பு; விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் நாளை பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் 'சிப்காட் 3-வது அலகு விரிவாக்கம்' செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு எதிராக போராடியவர்களில் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளது.
திருமண விழா; இந்த மோதல்களுக்கு இடையில்தான் திருப்பூரில் நடந்த திருமண விழா ஒன்றில் தமிழ்நாடு அமைச்சர் ஒருவரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அதே விழாவில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். சாமிநாதனுக்கு முன்பே அங்கு வந்த அண்ணாமலை.. சாமிநாதன் வந்த போது அவர் அருகே சென்று அவரை வரவேற்றார். அதன்பின் மணமக்களை வாழ்த்திவிட்டு இவர்கள் வட்டமாக அமர்ந்து இருந்தனர். மரியாதை நிமித்தமாக அங்கே அமர்ந்து பேசிக்கொண்டனர்.
தமிழ்நாடு அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்கும் நிலையில் அமைச்சர் ஒருவருடன் அவர் சந்திப்பு நடத்தியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications