பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்.. ஆயிரம் விளக்கில் குஷ்பு, காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் தற்போது 17 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    ஆயிரம் விளக்கில் குஷ்பூ போட்டி: தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று சட்டசபைக்குள் அதிக அளவு எம்எல்ஏக்களை அனுப்பிவிட வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக இருக்கிறது. தமிழகத்தில் பாஜக 20 இடங்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது.

    20 தொகுதிகள் கிடைத்தாலும் அதில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று பாஜக உறுதியாக இருக்கிறது. அதிமுகவின் கூட்டணியை பயன்படுத்தி தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.

    போட்டி

    போட்டி

    இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் தற்போது 17 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனி தொகுதியான தாராபுரத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

    ஆயிரம் விளக்கு

    ஆயிரம் விளக்கு

    ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுகிறார். முதலில் பாஜக சார்பாக இவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. அங்கு திமுக சார்பாக இளைஞரை செயலாளர் உதயநிதி போட்டியிடுகிறார். ஆனால் அங்கு பாமக போட்டியிட உள்ள நிலையில் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுகிறார்.

    கோவை

    கோவை

    கோவை தெற்கு வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

    காரைக்குடி

    காரைக்குடி

    அதேபோல் பாஜக சார்பாக காரைக்குடியில் எச் ராஜா மீண்டும் களமிறக்கப்படுகிறார். இவருக்கு இந்த தொகுதி உறுதியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதேபோல் பாஜக சார்பாக எச் ராஜா இங்கு களமிறக்கப்பட்டுள்ளார். இங்கு காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் மாங்குடி போட்டியிடுகிறார்.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முழு பட்டியல்

    • தனி தொகுதியான தாராபுரத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
    • ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி
    • கோவை தெற்கு வானதி சீனிவாசன் போட்டி
    • காரைக்குடியில் எச் ராஜா போட்டி
    • அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி
    • நாகர்கோவில்- எம்.ஆர். காந்தி போட்டி
    • துறைமுகம் - வினோஜ் பி செல்வம்
    • திருவண்ணாமலை - எஸ். தங்கவேல்
    • திருக்கோயிலூர் - வாட். கலிவரதன்
    • மொடக்குறிச்சி - டாக்டர் சரஸ்வதி
    • திட்டக்குடி - பெரியசாமி
    • திருவையாறு - பூண்டி எஸ் வெங்கடேசன்
    • மதுரை வடக்கு- டாக்டர் பி சரவணன்
    • விருதுநகர் - ஜி பாண்டுரங்கன்
    • ராமநாதபுரம் - குப்புராம்
    • திருநெல்வேலி - நாயனார் நாகேந்திரன்
    • கொளச்சல் - பி ரமேஷ்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+