திருச்சி சூர்யா சர்ச்சை: ட்விட்டரில் திமுக ராஜீவ் காந்தி - பாஜக அமர் பிரசாத் ரெட்டி உக்கிர மோதல்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ட்விட்டரில் விமர்சனம் செய்ததால் நள்ளிரவில் திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தியை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடுமையாக சாடினார்.
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் திருச்சி சூர்யா. திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன். பாஜகவில் சேர்ந்தது முதலே பல்வேறு சர்ச்சைகளில் திருச்சி சூர்யா அடிபட்டு வருகிறார்.
திருச்சி சூர்யா, பாஜகவின் பெண் நிர்வாகி டெய்சி சரணுடன் போனில் ஆபாசமாக பேசி சண்டையிட்ட ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில்
அதிகம் பகிரப்பட்டது. இது பாஜகவில் பெரும் புயலையே கிளப்பிவிட்டிருக்கிறது.

காயத்ரி நீக்கம்
பெண் நிர்வாகியை ஆபாசமாக இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த திருச்சி சூர்யா மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்தார். ஆனால் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் செயல்பட்டதாக கூறி 6 மாத காலத்துக்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பெண்ணை இழிவாக பேசிய திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுப்பதா? என்கிற விமர்சனமும் எழுந்தது.

கேடி ராகவன் கேஸ்
இதனைத் தொடர்ந்து திருச்சி சூர்யா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் திருச்சி சூர்யா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவும் விவாதத்துக்குரியதாக மாறியது. பாஜகவின் கேடி ராகவனின் ஆபாச பேச்சு விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாரணை குழு என்ன ஆனது என கேள்வி எழுப்பப்பட்டது.

அண்ணாமலைக்கு எப்போ தெரியும்?
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது அறிக்கையில், திருச்சி சூர்யாவின் ஆபாச பேச்சு குறித்த விவகாரம் இன்றுதான் கவனத்துக்கு வந்தது என கூறியிருந்தார். ஆனால் சர்ச்சையில் சிக்கிய டெய்சியோ 15 நாட்களுக்கு முன்னரே அண்ணாமலையிடம் இந்த பிரச்சனை பேசப்பட்டது. அப்போது இருவருக்கும் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார் அண்ணாமலை என கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தி- அமர் பிரசாத் ரெட்டி
டெய்சியின் இந்த ஊடக பேட்டியை முன்வைத்து அண்ணாமலை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களை டேக் செய்து திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி, Mr Ex officer @annamalai_k ...உங்கள் யோக்கியதை இவ்வளவு தானா?? என கேள்வி எழுப்பி இருந்தார். இது பாஜகவினரை கொந்தளிக்க வைத்தது. பாஜகவின் நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, யோக்கியதை பற்றி அயோக்கியன் நீ பேசலாமா??? என ராஜீவ் காந்திக்கு பதிலடி கொடுத்தார். ட்விட்டரில் நள்ளிரவில் நடந்த இந்த யுத்தம் ரணகளமாகிவிட்டது!
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications