கடைசி வரை வராத அண்ணாமலை.. காத்திருந்த எச்.ராஜா, கேசவ விநாயகம்.. தலைவர் இல்லாமலே தொடங்கிய கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை இல்லாமலையே தொடங்கியது, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BJP chief Annamalai to hold a meeting with the party district leaders today after Delhi trip

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் சரியில்லை. அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். முக்கியமாக அதிமுகவின் மறைந்த தலைவர்களை தாக்கி பேசி வருகிறார். அவரின் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று அதிமுக அறிவித்தது.

அண்ணாமலை டெல்லி பயணம்: இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் யாரையும் சந்திக்கவில்லை. அங்கே வெறுமனே காக்க வைக்கப்பட்டார்.

அதன்பின் மறுநாள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதில்.. அதிமுக பாஜக கூட்டணி முறிவிற்கு என்ன காரணம்? அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் என்ன சாதகம்? பாஜக தலைமையில் எப்படி கூட்டணி அமைப்பது? பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால் என்னென்ன சாதகங்கள் ஏற்படும்? என்ற ரிப்போர்ட் ஒன்றை அண்ணாமலை அளித்துள்ளார். இதற்கான புள்ளி விவரங்களையும் கூட அவர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் இன்னொரு பக்கம் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜக தலைவர்களிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார். அந்த ஆலோசனையின் முடிவில் நிர்மலா சீதாராமனும் ஒரு ரிப்போர்டை தயார் செய்தார். தமிழ்நாட்டில் பாஜக எவ்வளவு வலுவாக இருக்கிறது. பாஜகவின் உண்மையான பலம் என்ன? அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனியாக நிற்கும் பட்சத்தில் வாக்கு வங்கி எப்படி இருக்கும்?

பாஜக தலைமையில் தனியாக கூட்டணி அமைத்தால் யாரெல்லாம் கூட்டணியில் இணைவார்கள் என்று ரிப்போர்ட் ஒன்றை தயார் செய்து உள்ளாராம். இதை டெல்லியிடமும் நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ளாராம். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் நடைபயணம் இன்னொரு பக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு சுவாச குழாய் தொற்று ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிக்கல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் அவருக்கு சளி தொல்லை, அழற்சி இருப்பது சிடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று பாஜக அறிவித்துள்ளது.

இன்று ஆலோசனை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற வேண்டும். பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை இல்லாமலேயே தொடங்கியது, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+