தமிழ்நாடு வரும் அமித் ஷா.. நயினார் கையில் "ரெட் லிஸ்ட்".. அண்ணாமலை பற்றி பறக்கும் புகார்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவின் பூத் கமிட்டி தொடர்பான முக்கிய விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து இரண்டு மணிக்கு புறப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2. 50க்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்து அடைகிறார். 2.55 க்கு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அமைச்சர் 3 10 மணிக்கு திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்குகிறார்.

annamalai nainar nagendran bjp

அமித் ஷா தமிழ்நாடு பயணம்

அங்கிருந்து நேரடியாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு தேனீர் விருந்தில் கலந்து கொள்ளும் அமித் ஷாபின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்திற்கு 3 25க்கு வந்து அடைகிறார். மாநாட்டினை முடித்துவிட்டு ஐந்து மணிக்கு மாநாட்டு மைதானத்தில் இருந்து கிளம்பும் அமித் ஷா 5.15 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலி பேடிலிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி விமான நிலையம் சென்று அடைகிறார். மாலை 5,55 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்லும் அவர் இரவு 8 55 க்கு டெல்லி சென்று அடைகிறார் என அவரது பயணத்திடம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லையில் அமித் ஷாவுக்கு தயாராகும் தேநீர்

இன்று நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தனியார் விமானத்தில் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறங்க உள்ளார். அங்கிருந்து வாகனத்தில் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்துகொள்வார்.

இந்த தேநீர் விருந்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை பாரம்பரிய சுவையோடு தேநீர் பரிமாறப்பட உள்ளது என்றும், தேநீரோடு சில சிற்றுண்டிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக, நேற்று வாகனங்கள் சென்று நிற்கும் ஒத்திகையும், வீட்டில் விருந்துக்கு தேவையான ஏற்பாடுகளும் அதிகாரிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டன.

பின்னர் அங்கிருந்து நேரடியாக மாநாடு நடைபெறும் மைதானத்திற்கு அமித் ஷா செல்ல உள்ளார். இந்நிலையில், "அமித் ஷா நெல்லையில் டீ அருந்தப் போகிறார்" என்ற தகவல் நகரம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அமித் ஷாவிடம் புகார் தரும் நயினார்

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவின் பூத் கமிட்டி தொடர்பான முக்கிய விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் பூத் முகவர்களில் 50% பேர் போலியானவர்கள் என்றும், இல்லாத பெயர்களை இருப்பதாகக் கணக்கு காட்டியதாகவும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷிடம் புகார் தெரிவித்ததாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் ரவுடிகள் சிலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களை நீக்கவும் நயினார் திட்டமிட்டுள்ளார். பாஜகவின் நீண்டகால திட்டமான பூத் கமிட்டி அமைக்கும் பணி, அண்ணாமலை காலத்தில் முழுமையாக நடைபெறவில்லை. எனவே, 2026 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.

இதற்காக, கட்சியின் நிர்வாகிகள் குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள் குழு விரைவில் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலேயே பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தங்கினார். அப்போதுதான், அண்ணாமலை 50% போலியான பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கணக்கு காட்டியதாக பி.எல். சந்தோஷிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதே புகாரை அமித் ஷாவிடம் தெரிவிக்க நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று பாஜக மீட்டிங் முடிந்த பின் அது தொடர்பான புகார்களை அளிக்க நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+