மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027-க்கு தள்ளிப்போட்டு பாஜக சதித்திட்டம்.. பாயிண்ட்டை பிடித்த ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது என்றும் தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசு தெளிவான விளக்கம் அளித்தாக வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் தேதியை மத்திய அரசு அறிவித்த நிலையில், ஸ்டாலின் முக்கிய கோரிக்கையினை வைத்து இருக்கிறார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும், அதோடு சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியானதும், இது குறித்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027-க்கு தள்ளிப்போட்டு பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கூறினார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பாஜக சதித்திட்டம்
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
தெளிவான விளக்கம் வேண்டும்
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருந்ததை பார்க்கலாம். 2027-ம் ஆண்டுல நடக்கப்போற மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வேலைகளை மத்திய அரசு இப்ப சரியா முடிச்சுருக்கு. இந்த கணக்கெடுப்புல முதல் முறையா சாதிவாரியான தகவல்களும் சேர்க்கப்படும்னு அதிகாரிகள் சொல்லிருக்காங்க. இது மார்ச் 1, 2027-ல ஆரம்பமாகப்போகுது.
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முக்கியம்?
* பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு எடுத்த முடிவின்படி, இந்த புது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கப்போகுது. பீகார், தெலுங்கானா, ஆந்திரா மாதிரி சில மாநிலங்கள்ல ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்துருக்காங்க. கர்நாடக அரசும் 2015-ல எடுத்த கணக்கெடுப்பு தகவல்களை வெளியிட யோசிச்சுட்டு இருக்கு.
* இந்த கணக்கெடுப்பு ரெண்டு கட்டங்களா நடக்கும். லடாக், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற இடங்கள்ல 2026 அக்டோபர்ல முதல் கட்டம் தொடங்கும். இதன் மூலமா அடுத்த பத்து வருஷத்துக்கான மக்கள் தொகை பத்தின தகவல்களை சேகரிப்பாங்க.
முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு
* வரும் 2027-ஆம் ஆண்டில் நடக்கப்போற இந்த கணக்கெடுப்பு, நாட்டுல முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பா இருக்கும். தகவல்களை சேகரிக்கிறதுக்காக மொபைல் ஆப் உருவாக்கிருக்காங்க. கணக்கெடுப்பு வேலையை சரியா செய்ய ஒரு வெப்சைட்டும் ரெடி பண்ணிருக்காங்க. இந்த வருஷம் மார்ச் மாசத்துல, உள்துறை அமைச்சகம், எல்லா வேலையும் முடிஞ்சிருச்சுன்னு நாடாளுமன்ற குழு கிட்ட சொல்லியிருக்கு.
* 2021-ல மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தாங்க. ஆனா கொரோனா வந்ததால அது தள்ளிப்போச்சு. இப்ப, புது திட்டத்தின்படி 2027-ல முழுசா கணக்கெடுப்பு நடத்தப்போறாங்க.
பட்ஜெட்ல சில மாற்றங்கள்
* 2024-25-ம் ஆண்டுல மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ₹1,309 கோடி ஒதுக்குனாங்க. அதை 2025-26-ம் ஆண்டுல ₹574 கோடியா குறைச்சிட்டாங்க. இதற்கான காரணங்கள அமைச்சகம் சொல்லியிருக்கு. இந்த நிதி மாற்றம் திட்டத்தோட வேலைகளை பாதிக்காதுன்னு அதிகாரிகள் சொல்லிருக்காங்க.
* இந்த புது மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டுல இருக்கிற மக்கள் பத்தின சரியான தகவல்களை கொடுக்கும். இது அரசின் திட்டங்கள் உருவாக்குறதுக்கும், சரியா செயல்படுத்துறதுக்கும் உதவும்னு அதிகாரிகள் சொல்றாங்க.
* சாதிவாரி தகவல்களை சேர்க்கிறதுனால, சமூகத்துல இருக்கிற தேவைகளை தெரிஞ்சுக்க முடியும். அரசியல் மற்றும் சமூகத்துல முன்னேற்றம் கொண்டு வர இது உதவும்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications