சும்மா விட மாட்டேன்? நெட்டிசன்களுக்கு டாக்டர் ஷர்மிகா “வார்னிங்” -மீம் கண்டெண்டான பாஜக டெய்சி மகள்
சென்னை: பாஜகவை சேர்ந்த டெய்சியின் மகளும் சித்த மருத்துவருமான ஷர்மிகா, அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கும் நிலையில் பலரும் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன்னை கலாய்த்து வரும் மீம் கிரியேட்டர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
பல தொலைகாட்சி மருத்துவ நிகழ்ச்சிகளில் மருத்துவ குறிப்புகளை வழங்கி மக்களால் பரவலாக அறியப்பட்டவர் டெய்சி சரண். இந்த நிலையில் பாஜகவில் இணைந்த இவருக்கு அக்கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் பதவி கிடைத்தது.
இவரது மகள் ஷர்மிகாவும் சித்த மருத்துவரான உள்ளார். ஏராளமான யூடியூப் சேனல்கள் வளைத்து வளைத்து இவரிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பி வருவதால் இவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக மாறி இருக்கிறார்.

விமர்சிக்கப்படும் ஷர்மிகா
யூடியூப் சேனல்களில் தொடர்ந்து சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனை வழங்கி வரும் இவர், சமீபகாலமாக அதிகளவில் இணையதளங்களில் விமர்சிக்கப்படும் நபராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய நேர்காணல்களில் மருத்துவம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கைகளை புகட்டுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை பேறு
குழந்தையின்மை தொடர்பாக ஒரு நேர்காணலில் ஷர்மிகா பேசும்போது, "குழந்தை பிறப்பதற்கு கடவுள்தான் மனசு வைக்க வேண்டும். பாலியல் உறவு வைத்துக்கொள்வது, உடல்நலக் குறைபாடு போன்றவை எல்லாம் 2 ஆம் தர காரணங்கள்தான். முதல் காரணம் என்பது இயற்கை உங்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பை தர வேண்டும்.
இயற்கைதான் வேண்டும்
இயற்கை ஒத்துழைக்க வேண்டும் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். ஒருவர் செய்த தீமையான விசயங்களால் வாரிசு இருக்கக்கூடாது என்று நினைத்தால் இருக்காது. ஆனால், ஒரு நல்ல மனுசன், எந்த பிரச்சனை இல்லை என்றால் அடுத்தடுத்த மாசம் கிடைக்கும்." என்று கூறினார். இதுவும் அறிவியலுக்கு புறம்பான கருத்து என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மாட்டுக்கறிக்கு எதிராக பேச்சு
அதேபோல் மாட்டுக்கறி சாப்பிடுவது தொடர்பாக யூடியூப் சேனலில் எழுப்பட்ட கேள்விக்கு, அறிவியலை ஓரம் வைத்துவிட்டு பேசுவோம் என்று ஆரம்பித்து "நம்மை விட பெரிய விலங்கை சாப்பிட்டால் செரிமானம் செய்யமுடியாது. பீஃப் நம்மை விட பெரிய விலங்கு என்பதால் அதை சாப்பிடக்கூடாது. என்று கூறியதும் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்திய மருத்துவ இணை இயக்குநர்
"குளோப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரு நாளில் 3 கிலோ எடை கூடும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்." என்றெல்லாம் பல கருத்துக்களை ஷர்மிகா தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆதாரமே இல்லை
"மருத்துவ நெறிகளுக்கு எதிராக பேசும் டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சித்த மருத்துவம் கூறவில்லை. ஷர்மிகா சொல்வதற்கு மருத்துவ ரீதியாக ஆதாரமே இல்லை." என்றார். இந்த நிலையில் தன்னை ட்ரோல் செய்பவர்களை எச்சரிக்கும் வகையில் ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார் ஷர்மிகா.

எச்சரித்த ஷர்மிகா
அவர் பேசுகையில், "ஒரு டாக்டரை ட்ரோல் செய்வதற்கு முன் யோசிங்கப்பா கொஞ்சம். யாரை பேசுகிறீர்கள்? ஒரு ராணுவ வீரரை போன்றுதான் மருத்துவரும். நாட்டுக்கு சேவை செய்பவர்கள். நான் ஒரு சித்த மருத்துவர். நீங்கள் டாக்டரையே இல்லை என்கிறார்கள். நான் படித்து வந்துள்ளேன் என்ன பேச வேண்டும் என்று தெரியும். மருத்துவர்களை விமர்சிப்பதால், அவர்களை தொந்தரவு செய்தால் தண்டிப்பதற்கான சட்டங்களும் உள்ளன. எங்கள் சித்தா மருத்துவர்கள் சேர்ந்த என்ன ஆகும் தெரியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
-
மதுரை மெட்ரோ ரயிலுக்கு மறுப்பு ஏன்? திருப்பரங்குன்றம் முருகன் முன்.. ஆதாரத்துடன் அண்ணாமலை ஓபன் டாக் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை











Click it and Unblock the Notifications