சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்பதானே தெரியுது.. தேமுதிகவை ஏன் மோடி பதவியேற்பு விழாவுக்கு பாஜக கூப்பிடவில்லை என்று!

தேமுதிகவுக்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் பதவியேற்பு விழாவுக்கு விஜயகாந்த்-பிரேமலதாவை அழைக்காததற்கு காரணம் இது தானா?

    சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்கு தேமுதிகவை கூப்பிடவில்லை என்று அக்கட்சித் தலைமை வருத்தப்படுகிறதாம். ஆனால் கட்சியை இப்படி வெச்சிருந்தால், தேமுதிகவை எப்படித்தான், யார்தான் விழாவுக்கு கூப்பிடுவாங்க? விஜயகாந்த் இதுவரை சம்பாதித்த ஒட்டுமொத்த உழைப்பு, நம்பிக்கை, நேர்மையை அந்த கட்சி பொறுப்பாளர்கள் மொத்தமாக கரைந்து காணாமல் போகச் செய்துவிட்டார்கள்!

    பாமகவோடு ஒப்பிட்டு தேமுதிக சீட் அதிகமாக கேட்டபோதே கூட்டணி தலைமை யோசித்தது. தொடர்ந்து பேரத்தை நடத்திய போதும், தேமுதிகவை கொஞ்சம் தள்ளியே வைத்தது அதிமுக. உண்மையில் தேமுதிகவின் எதார்த்த நிலையை அதிமுகதான் கரெக்டாக கணித்து வைத்துள்ளது.

    அதேசமயம், பாஜக தலைமையின் ரெகமண்டேஷனை மறுக்க முடியாமல் தேமுதிகவுக்கு சீட் தந்தது அதிமுக. எனினும் விஜயகாந்த்தின் செயல்பாடு இல்லாத கட்சியை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    டெல்லி மந்தையில் சந்தி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் கோஷ்டி சண்டை.. மத்திய அமைச்சர் பதவி அம்போ!டெல்லி மந்தையில் சந்தி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் கோஷ்டி சண்டை.. மத்திய அமைச்சர் பதவி அம்போ!

    செலவு செய்யவில்லை

    செலவு செய்யவில்லை

    போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றில்கூட ஜெயிக்கவில்லை. ஏன், என்ன காரணம்? முதலில் தொகுதியில் கட்சி சார்பில் எந்த செலவையும் செய்யவில்லை. அதிலும் ஒரு வேட்பாளர், தேர்தல் செலவுக்கு பணமே தரவில்லை, கடன்வாங்கிதான் தொகுதிக்குள் செலவு செய்து வருகிறேன் என்று ஓபனாக சொன்னார். இதை தேமுதிக ஒப்புக் கொண்டதா என தெரியவில்லை.

    விஜயகாந்த் மகன்

    விஜயகாந்த் மகன்

    விஜயகாந்த் மகன் மூத்த தலைவர்களை அன்று விமர்சித்து பேசியதற்கு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இதை கண்டித்தார்களா என்றுகூட தெரியவில்லை. எல்லாவற்றையும் கவனித்து வரும் மக்கள், இதையும் கவனிக்கதானே செய்வார்கள்? மன்னிப்பு, வருத்தம் இது எதுவுமே இல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய வந்தால் யார்தான் இதை ஏற்பார்கள்?

    மீடியாக்கள்

    மீடியாக்கள்

    பிரேமலதாவின் உளறல், சர்ச்சை பேச்சுகளை மீடியாக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தன. சில பிரச்சாரங்களில் வேனை விட்டு கீழே கூட இறங்காததும்கூட மக்களை யோசிக்க வைத்துவிட்டது. தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை தேமுதிக ஒப்புக் கொண்டதா என தெரியவில்லை.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    இப்போது தங்கள் கட்சி மீதான குறைகள், பலவீனங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. நல்ல விஷயம்தான். ஆனால் விஜயகாந்த் நன்றாக இருந்தால் இந்த பிரச்சனையே இல்லை. அன்று அவர் பட்ட பாடு, அவரது பேச்சு, உழைப்பு, கடைசிவரை அவரது கறைபடாத கைகள், இது எல்லாவற்றிற்கும் மேலாக அவரது ஈர உணர்வுள்ள மனசு போன்றவைகளை தேமுதிக முற்றிலும் சிதைத்தே விட்டது என்பதுதான் உண்மை.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    தேமுதிக தலைவராக இல்லாமல் தமிழக மக்களால் வெறுக்கவே முடியாத ஒரு தலைவர்தான் விஜயகாந்த்! ஆனால் தொண்டர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் சுதீஷ், பிரேமலதா இருவரும் நடத்திய பேரங்கள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாத அளவுக்கு மண்ணை கவ்வ வைத்துவிட்டது. வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி போனது அதிமுக. அதிலும் "தேமுதிக வந்தால் நல்லது, வராவிட்டால் இன்னும் நல்லது" என்று சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார்.

    இமேஜ்

    இமேஜ்

    இவ்வளவு எதிர்ப்பு இருந்தும், பாஜக நம்பி கை கொடுத்தது, விஜயகாந்த் வீடு வரை சென்று பாஜக பொறுப்பாளர் பேசினார், அதிமுகவிடம் எடுத்து சொல்லி சீட் தரப்பட்டது, கூட்டணிக்குள் அழைத்து வரப்பட்டது. இதெல்லாம் எதனால்? விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக! ஆனால் தேமுதிக பாஜகவின் நம்பிக்கையை காலி செய்துவிட்டது. அவர்களின் எண்ணத்தை பொடிப்பொடியாக்கிவிட்டது. கூடவே அதிமுகவின் இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டது.

    அழைப்பு இல்லை

    அழைப்பு இல்லை

    இவ்வளவு குறைகள் தேமுதிக தரப்பில் வைத்து கொண்டிருந்தால், எப்படி விழாவுக்கு கூப்பிடுவார்கள்? விழாவுக்கு ஏன் கூப்பிடவில்லை என்று பாஜக நிர்வாகிகளை கேள்விகூட கேட்க முடியாதே? தேமுதிகவை இங்க இருக்கிற தமிழக அரசியல் கட்சிகளை ரொம்பவும் நம்பியது மேலிடத்து பாஜகதான்! எதற்காக தேமுதிகவுக்கு மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை அனைவராலும் இப்போது நன்கு புரிந்து கொள்ள முடிகிறது!

    English summary
    No invitation to DMDK President Vijayakanth and Premalatha for Modis oath Ceremony. It is said to have caused dissatisfaction with the DMDK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X