சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக மீது "டெல்லி" வரை பறந்த புகார்.. விடாமல் விரட்டும் காயத்ரி ரகுராம்.. வெடித்த வீடியோ விவகாரம்

திமுக மீது காயத்ரி ரகுராம் டெல்லியில் புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மீது புகார் ஒன்றினை டெல்லி வரை கொண்டு சென்றுள்ளார் பாஜகவின் காயத்ரி ரகுராம்.. டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மாவை நேரில் சந்தித்து அந்த புகார் மனுவை தந்துள்ளார்.

பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராமுக்கு, கட்சியில் இணைந்து ஓரிரு வருடத்திற்கெல்லாம் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.

அதுவரை விசிகவும், திருமாவளவனையும் மட்டுமே சீண்டி கருத்து தெரிவித்து வந்தார் காயத்ரி.. இவரது கருத்தினையும், ட்விட்டினையும் விசிக தலைமை பெருமளவில் கண்டுகொள்வதில்லை.. ஆனால், சிறுத்தைகள் திரண்டு வந்து காயத்ரி ரகுராம் கருத்துக்கு பதிலடி தருவார்கள்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது.. வீடியோ வெளியிட்டு சத்குரு சொன்ன அட்வைஸ்தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது.. வீடியோ வெளியிட்டு சத்குரு சொன்ன அட்வைஸ்

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக மீது தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் காயத்ரி ரகுராம். முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து எத்தனையோ ட்வீட்களை பதிவிட்டு, அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, திமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவர், காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை வெளியிட்டு ஆபாசமாக கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்பட்டு, அதற்கு கண்டனமும் எழுந்தது.

 பால்கனகராஜ்

பால்கனகராஜ்

இதுகுறித்து, காயத்ரி ரகுராம் தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் சென்னை கமிஷனர் ஆபீசுக்கு வந்து புகார் தந்தார்.. பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் திமுக பிரமுகர் ஜெயச்சந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு மனுவும் தரப்பட்டது.. இதையடுத்து, காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட மதுரை தெற்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், அப்பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்...

 தண்டனை

தண்டனை

ஆனாலும் காயத்ரி சமாதானமாகவில்லை.. மறுபடியும் ஒரு ட்வீட் போட்டார்.. "ஜெயச்சந்திரன், ராஜலிங்கம் ஆகியோர் திமுக உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.. கிஷோர் சாமி மற்றும் கல்யாண ராமன் போல இவர்களுக்கு தண்டனை ஏன் தரவில்லை? திமுக சமூக நீதிக்கு துணை நிற்காதா? உங்கள் மகளுக்கு இப்படி நடந்தால் ஒத்துக் கொள்வீர்களா? குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்யப்படும் வரை நான் ஓயமாட்டேன்" என்று கேள்வி எழுப்பிருந்தார்.

 கனிமொழி

கனிமொழி

அத்துடன் இந்த ட்வீட்டை, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பிடிஆருக்கு டேக் செய்திருந்தார். இப்போதும் இந்த விஷயத்தை காயத்ரி விடவில்லை.. டெல்லி வரை கொண்டு போய்விட்டார் காயத்ரி. தமிழக பாஜக செயலர் சுமதி வெங்கடேஷ் மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மாவை நேரில் சந்தித்து புகார் மனுவை தந்துள்ளனர்..

 புகார் மனு

புகார் மனு

அதில், "காயத்ரி ரகுராமை தரக்குறைவாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட திமுக நிர்வாகிகள் மீது புகார் அளித்தும் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுமதி வெங்கடேசை போலீசார் தாக்கியுள்ளனர். காயத்ரி ரகுராம் குறித்து அவதூறு பரப்பி திமுக நிர்வாகிகள் மீது், சுமதி வெங்கடேசனை தாக்கிய போலீசார் மீதும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது தேசிய மகளிர் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
BJP Gayathri Raghuram complaint in Delhi National women commission against DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X