பாஜக பிளான் போடுது! டெல்லியிலிருந்து வந்த மெசேஜ்! நீங்க ஏன் கவலைப்படுறீங்க? ஸ்டாலின் தந்த வாக்குறுதி
முதல்வர் ஸ்டாலினுடன் கார்கே நடத்திய சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: கடந்த வாரம் தமிழ்நாடு வந்திருந்த போது, முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து இருக்கிறார். அந்த சந்திப்பில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றும் ஒரு முயற்சியை பாஜக எடுத்திருப்பதாக ராகுல்காந்திக்கு கிடைக்கும் தகவலை ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கார்கே.
முதல்வரின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கடந்த 1-ந்தேதி சென்னையில் நடந்தது. வடமாநில தலைவர்களான மல்லிகார்ஜுனகார்கே, ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தேஜஸ்வி, சென்னை வந்தடைய காலதாமதமானதால் கூட்டம் நிறைவு பெறும் நேரத்தில்தான் மேடை ஏறினார். இந்த பொதுக்கூட்டத்துக்கு சரியான நேரத்தில் வந்திருந்த கார்கே, ஃபரூக், அகிலேஷ் ஆகியோருடன் கூட்டம் நடக்கும் ஸ்பாட்டில் மேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த ஓய்வு அறையில் ஸ்டாலின் 30 நிமிடம் ஆலோசித்திருக்கிறார்.

ராகுல் காந்தி
அப்போது, நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரிவாகவே ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றும் ஒரு முயற்சியை பாஜக எடுத்திருப்பதாக ராகுல்காந்திக்கு கிடைக்கும் தகவலை ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கார்கே. அதற்கு எந்த பதட்டமும் அடையாமல், இதையெல்லாம் செய்வதுதான் பாஜகவின் முகமே. அவர்கள் முயற்சி எடுக்கட்டும். கூட்டணி குறித்த முடிவை திமுகதானே எடுக்கும். அதனால் நீங்கள் இதைப்பற்றி வொர்ரி பண்ணிக்காதீர்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என உறுதி தந்திருக்கிறார் ஸ்டாலின்.

கவலை வேண்டாம்
அப்போது, மோடி-உதயநிதி சந்திப்பு பற்றி பேச்சு எழுந்துள்ளது. அது குறித்து பேசிய ஸ்டாலின், இந்த சந்திப்பில் நான் தான் இருந்திருக்க வேண்டும் ; ஆனால், இங்கு எனக்கு பல வேலைகள் இருந்ததால் நகரமுடியவில்லை. அதனால் உதயநிதியை அனுப்பி வைத்தேன். நீட் தேர்வு விலக்கு குறித்து பேசவே மோடியை உதயநிதி சந்தித்தார் என சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் எதிர்க்கட்சிகள் ஏன் ஒன்றிணைய முடியவில்லை ? என தேசிய அரசியல் குறித்து விவாதம் நடந்துள்ளது.

மோடி நட்பு
மம்தா, மாயாவதி, ஜெகன்மோகன் ஆகியோரை மோடி தனது மறைமுக நட்பில் வைத்திருக்கிறார். அதனாலேயே , காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் சிக்கல் வருகிறது என கார்கே விவரித்திருக்கிறார். அத்துடன், நீங்கள் முயற்சி எடுங்கள் ; உங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார் கார்கே என்கிறார்கள் மேலிட தொடர்பாளர்கள். இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டணி பற்றி பேசி உள்ளார். அவர் தனது பேச்சில், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம்.

ஒற்றுமை
இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது. தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம் என்று மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார். அதோடு விடாமல் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசுகையில்.. தான் ஏற்கனவே தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அரசியலில்தான் தான் இருப்பதாகவும் பேசி இருந்தார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications