காதலோ.. கண்றாவியோ ரூம் போட்டு பேசுங்க - கோவை மாணவி வழக்கில் கஸ்தூரி சர்ச்சை பேச்சு
சென்னை: கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி குறித்தும் தவறாக விமர்சிக்கப்படுகிறது. அனைவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது என்று கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கிவிட்டார். ஆனாலும் விமர்சனங்கள் குறையவில்லை. பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி, பலாத்காரத்திற்கு அந்த ஜோடியும் ஒரு காரணம். பேச்சுவார்த்தை நடத்திய தீர வேண்டும் என்றால் ரூம் போட்டு கூட பேசலாம் என்று சொல்லியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜக கலை பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, "எங்க ஊரில் என்ன ஒரு மாதிரி பேய் பிடிச்ச மாதிரி இருக்க என்று கேட்பார்கள். இன்றைக்கு திரைத்துறையை பூதம் பிடித்துள்ளது. திரைத்துறை ஒருத்தரிடம் இருந்தால் எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ்வளவு தான் வளர்க்க முடியும். அது பொதுவாக இருந்தால் அந்த வளர்ச்சியை இன்னும் பரிணமிக்க முடியும். என்ன செய்தால் அவர்களிடம் இருந்து மீட்க முடியுமோ, அதை எல்லாம் செய்து மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

திரைத்துறை ஆதிக்கம்
திரைத்துறையினரை என்ன செய்து விரிவுபடுத்த முடியுமோ அதை செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து ஒருவரை வைத்து எடுத்தால் தான் படமே எடுக்க முடியும். அதை விட சிறிய படங்களை எடுத்தால் அதை ரீலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நல்ல படைப்பாளர்களை எப்படி அடையாளம் கண்டறிவது என்பதை யோசிக்க வேண்டும். காரணம் மக்கள் நல்ல படைப்புகளை கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு வெளியான படங்களை விட, தீபாவளிக்கு முன்பு வெளியான காந்தாரா படத்தை அதிகம் பார்த்தனர். நல்ல படம் எங்கிருந்தாலும் அதைத் தமிழர்கள் தமிழத்தில் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்த வரவேற்பை ஒருவர் மட்டும் ஏன் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை மீட்டெடுப்பது முக்கியமான கோரிக்கை. இதற்கு நாம் முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.
காதலோ.. கண்றாவியோ
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி, "கோவை பாலியல் பலாத்காரத்திற்கு அந்த ஜோடியும் ஒரு காரணம். இந்த விவகாரத்தில் நான் காவல்துறையை குறை சொல்ல மாட்டேன். நான் ஒரு டீன் ஏஜ் சிறுமியின் தாய். அதனால் என் குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கிறேன். காதல், கண்றாவி, வியாபாரம் உள்ளிட்ட எந்த காரணமாக இருந்தாலும் நேரம் கெட்ட நேரத்தில் தேவையில்லாத இடத்திற்கு செல்ல கூடாது. உங்களால் முடியவில்லை.
பேச்சுவார்த்தை நடத்திய தீர வேண்டும் என்றால் ரூம் போட்டு கூட பேசிக் கொள்ளலாம். நான் மகன், மகளை பெற்ற தாயாக சொல்கிறேன். இங்கு சிங்கப்பூரை போல பாதுகாப்பு இல்லை. ஆண்களும் தேவையில்லாத நேரங்களில் வெளியில் செல்ல கூடாது. வாயை கட்டி, வயிற்றை கட்டி வளர்க்கிறோம். நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு. இதை பெண்ணியத்திற்கு எதிரானது என்றால் பெண்ணியமே வேண்டாம். படித்து பெரிய உத்யோகத்திற்கு செய்து சாதனை செய்வதை சுதந்திரம் என்று சொல்லுங்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications