"4 வருடங்கள் கூட.." ஜனநாயகன் படத்தில் உண்மையில் என்ன சிக்கல்! உடைத்து பேசிய சரத் குமார்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியுள்ள நிலையில், உண்மையில் அந்தப் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பது குறித்து பாஜகவின் சரத்குமார் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்தித் திணிப்பு குறித்து விளக்கும் படம் தான் பராசக்தி என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளைய தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்தப் பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடவுள்ளனர். அதன்படி மத்தியத் தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லி இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார்.

சரத்குமார்
இந்த நிகழ்ச்சியில் மேலும் பல பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். நடிகரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான சரத்குமாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பராசக்தி மற்றும் ஜனநாயகன் படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பராசக்தி இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையமாகக் கொண்டது என்றார்.
இது தொடர்பாக சரத்குமார் மேலும் கூறுகையில், "பராசக்தி திரைப்படம் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் நடந்த இந்தித் திணிப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டது. இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிகள் நடந்தபோது ஏற்பட்ட போராட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதையாக பராசக்தி உருவாகப்பட்டு இருந்தது" என்றார்.
பராசக்தி
பராசக்தி படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோரும் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள நிலையில், அதில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தித் திணிப்புக்கு எதிராகவும் அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களை அடிப்படையாகவும் உருவாக்கப்பட்ட படம் பராசக்தி.
ஜனநாயகன்
பொங்கலன்று வெளியான பராசக்தி மிக பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல பொங்கல் விழாவுக்கு ரிலீஸாகி இருக்க வேண்டிய மற்றொரு படம் ஜனநாயகன். கடந்த 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய ஜனநாயகன் திரைப்படம், சென்சார் பிரச்சினையால் ரிலீஸ் ஆகவில்லை. சென்சார் போர்ட் ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் தராததே இதற்குக் காரணம். இது தொடர்பாகவும் சரத் குமார் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
4 ஆண்டுகள் கூட
இது தொடர்பான கேள்விக்கு சரத் குமார், "ஜனநாயகன் படத்தில் சென்சார் போர்ட்டிற்கு சில ஆட்சேபனைகள் உள்ளன. திரைப்படத் தணிக்கை வாரியம் சுதந்திரமானது. நான் பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர். ஆனால், எனது படமே கடந்த 4 ஆண்டுகளாக சென்சார் பிரச்சினையில் சிக்கியுள்ளது. பொருத்தமற்றதாகக் கருதும் எந்தப் படத்திற்கும் சென்சார் வாரியம் ஆட்சேபிக்க முடியும். கட்சியில் இருந்தாலும் என்னால் என் படத்திற்கே தலையிட முடியவில்லை
சென்சார் போர்ட்டிற்கு இருக்கும் ஆட்சேபனை காரணமாகவே பட ரிலீஸ் தாமதமாகிறது. மற்றபடி அதில் வேறு எதுவும் இல்லை.. இந்த நாட்டில் அனைத்தையும் அரசியல் மயமாக்கக் கூடாது. அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்" என்றார்.
-
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications