ஆட்சிக்கு வந்துட்டு வாக்குறுதியை மறந்துட்டீங்க.. இதான் ஓராண்டு சாதனையா? - அண்ணாமலை கேட்ட 5 பாயிண்ட்!
சென்னை : பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து அதன் காரணமாக ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை பற்றி எதுவுமே பேச மறுக்கிறது திமுக அரசு எனக் குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டிய பண பலன்கள் அனைத்தையும் நிறுத்திவைத்து, அவற்றை வழங்க எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது தி.மு.க. அரசு எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 5 அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊதிய உயர்வே இன்று வரை இல்லை
1. போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 12(3) ஒப்பந்தம் முறைப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. ஆனால் அதன் அடிப்படையில் 14-வது ஒப்பந்தம் கடந்த 01/09/2019-ல் நிறைவு பெற்று தொழிலாளர்கள் அனைவருக்கும் புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் கொரோனா காலகட்டத்தில் அரசு இயந்திரங்கள் முடங்கி கிடந்த காரணங்களாலும் அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 15 மாதங்கள் கடந்த பிறகும், வருகின்ற 01/09/2022 அன்று 15-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தருணத்தில் 14வது ஊதிய உயர்வே இன்று வரை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அவதி
2. ஓய்வு பெற்ற சுமார் 87000 பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய DA கடந்த 85 மாதங்களாக வழங்கவில்லை அதனால் DA உயர்வு கிடைக்காமல் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு வழங்க வேண்டிய DA-வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் போக்கு
3. கடந்த இரு மாதங்களில் ஓய்வு பெற்ற சுமார் 3000 தொழிலாளர்களுக்கு எந்த விதமான பணம் பலன்களும் வழங்காமல் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் போக்கு தற்போதைய ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை இந்த அரசு வழங்கிட வேண்டும்.

பேச மறுக்கும் திமுக
4. பல வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்ற இந்த திமுக அரசு, அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றாமல் இருப்பது தான் இவர்களின் ஓராண்டு சாதனை. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து அதன் காரணமாக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை பற்றி எதுவுமே பேச மறுக்கிறார்கள்.

பி.இ படித்தாலும் டிரைவர் வேலையா?
5. உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து அவர்களின் கல்வித் தகுதிக்கு தகுந்த பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகள் பொறியியல் படிப்பு முடித்து இருந்தாலும் கூட கல்வித் தகுதியை பாராமல் அவர்களுக்கு ஓட்டுனர் நடத்துனர் பணியையே வழங்கி வருகின்றனர். இது போன்ற பல கோரிக்கைகளை பல மாதங்களாக முன்வைத்து தீர்வுக்காக காத்திருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களை இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை தமிழக பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. அரசின் மெத்தனப் போக்கால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அது பொதுமக்களை பாதிக்கும். இதற்கு மேலும் காலம் கடத்தாமல் தொழிலாளர்களின் மேற்கண்ட நேர்மையான கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications