அண்ணாமலை ஒரு PM மெட்டீரியல்.. பாரிவேந்தர் சொன்னதுமே அவர் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
சென்னை: தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், அண்ணாமலை ஒரு பிஎம் மெட்டீரியல் என்று கூறினார். தமிழன் எப்போது வருவான், எப்போது இந்தியாவை ஆள்வான் என்ற நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில், சொல் தமிழா சொல் பேச்சுப்போட்டியின் நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பிஎம் மெட்டீரியல் என்று கூறினார்.

அண்ணாமலை பிஎம் மெட்டீரியல்
பாரிவேந்தர் கூறியதாவது:- "தமிழன் எப்போது வருவானோ.. எப்போது இந்தியாவை ஆள்வானோ என்று நாம் எல்லாரும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. இதனை நான் பெயரளவில் சொல்லவில்லை. மனதில் பட்டது. மனதில் உணர்ந்தது. டெல்லியில் பார்த்தாலும் சரி.. இடையில் பார்த்தாலும் சரி. அண்ணாமலையை ஒரு பிஎம் மெட்டீரியல் என்று சொல்வேன்.
தமிழ்நாட்டில் இருக்கிற 10 அமைச்சர்கள் 12 ஆம் வகுப்பை தாண்டாதவர்கள். நாம் இன்னைக்கு கல்வியில் தமிழ்நாடு வளர்ந்துவிட்டது என்று பெருமையாக பேசுகிறோம். உயர்ந்துவிட்டோம் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் நம் அமைச்சர்களுக்கு இந்த அளவுக்கு மட்டும் படிப்பு தகுதி இருந்தால் எப்படி அடுத்த நிலைக்கு போக முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
சீமான் - அண்ணாமலை
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப்பேராயம் நடத்திய மாநில அளவிலான 'சொல் தமிழா சொல்' பேச்சுப் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் பாரிவேந்தர் மேற்கண்டவாறு பேசினார்.
தமிழக பாஜக தலைவர் ஓரிரு நாளில் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த வாரத்திற்குள் இதற்கான அறிவிப்பை டெல்லி தலைமை வெளியிட உள்ளது. தமிழக பாஜகவின் அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலை கூறியுள்ளார். நான் யாரையும் கை காட்டவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
அடுத்த பாஜக தலைவர்
பாஜக தலைவருக்கான ரேசில் நான் இல்லை என அண்ணாமலை ஓபனாக பேசியிருப்பது அவர் மீண்டும் பாஜக தலைவராக நியமிக்கப்படமாட்டார் என்பது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான் பாரிவேந்தர், அண்ணாமலையை ஒரு பிஎம் மெட்டீரியல் எனப்பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை அடுத்தகாக மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று கூட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுவது கவனிக்கத்தக்கது.
எனினும், என்னை டெல்லிக்கு பேக்கப் பண்ண பார்க்காதீர்கள் என்றும் நான் தமிழகத்தில் தான் இருப்பேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தொண்டர்களோடு களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் அண்ணாமலை பேசியிருக்கிறார். இதனால் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசியலில் நீடிப்பார் என்றும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுக்க தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபடலாம் என்பதனையும் அண்ணாமலையின் பேச்சு காட்டுவதாக உள்ளது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications