அதிமுகவினரே மாத்தி பேசுவாங்க.. மோடி தான் பிரதமர்னு சொல்லுவாங்க.. பற்ற வைத்த கரு.நாகராஜன்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்தது எனக் கூறிய நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
அண்மையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவினர் அறிவித்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் அமைதி காத்து வருகின்றனர். கூட்டணி முடிவை தேசிய தலைமையே உறுதி செய்யும் எனத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். தேசிய தலைவர்களுடன் அங்கு ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. காலில் ஒரு கட்டையை கட்டிக்கொண்டு ஓட்டப்பந்தயந்தில் ஓடுவது போல், பாஜகவோடு கூட்டணியை வைத்துக்கொண்டு நாம் வெற்றி பெறுவது என்பது சற்று கடினமாகவே இருந்தது. அந்த தடையும் இன்று நீங்கி விட்டது. இனிமேல், அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது.
அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார். தன்னைத் தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்காக 40, 50 வருடம் உழைத்ததை போல், அனைவரை பற்றியும் விமர்சனம் செய்கிறார் பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்தது என்ற அதிமுக முன்னாள் நத்தம் விஸ்வநாதன் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், "இதுநாள் வரை அந்த தடை நத்தம் விஸ்வநாதனுக்கு தெரியவில்லையா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "அவங்களே ஆதரித்து பேசுவாங்க.. மாற்றி பேசுவாங்க.. மோடி தான் பிரதமர்னு சொல்லுவாங்க, இதை வழக்கமாக பார்த்து கொண்டுதான் உள்ளோம். இதற்கெல்லாம் எங்கள் தலைவர் பதில் சொல்வதுதான் சரியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆலோசனை கூட்டம் பற்றி பேசிய கரு.நாகராஜன், "3 மாதங்களுக்கு ஒருமுறை பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூட்டம் நடைபெறுவதால் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அண்ணாமலை இந்த கூட்டத்தில் சிறிது நேரம் கலந்து கொள்வார். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும். அதற்கு கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக












Click it and Unblock the Notifications