Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டமார்".. நயினார் ஒன்று சொல்ல.. அதற்கு எல்.முருகன் வேற ஒன்று சொல்ல.. என்னாச்சு.. அனலடிக்கும் பாஜக

நயினார் நாகேந்திரன், எல்.முருகனிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு மற்றும் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை, இரண்டுமே இன்றுவரை விவாதத்தை கிளப்பி வருகிறது.. இதில் பாஜக தலைவர்களே கருத்தில் முரண்பட்டு நிற்பது ஆச்சரியத்தை தருகிறது.

சட்டமன்றத்தில், நயினார் நாகேந்திரன், நீட் தேர்வில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.. இதற்கு முதல்வர், தமிழகத்திற்கு விலக்கு பெறவேண்டும் என்பது தான் திமுக, அதிமுகவின் நிலைப்பாடாகவுள்ளது.

அதைப் பற்றி விமர்சனம் செய்ய விருப்பமில்லை.. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும்போது அதற்கு பாஜக குரல் கொடுக்க தயாரா" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.. உடனே நயினாரும், "சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம்" என்றார்.

வழக்கு

வழக்கு

இந்த நிலையில்தான், தமிழ்நாடு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கபட்ட குழுவுக்கு தடை விதிக்க கோரி இதற்கு தடை விதிக்க கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

இதற்கு நீதிபதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது, குழு அமைப்பது தொடர்பாக கோர்ட்டின் அனுமதி பெறப்பட்டதா? என்று கேட்டனர்.. இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, நீட் தேர்வு விவகாரத்தில், சட்டத்திற்கு உட்பட்டு பாஜக ஆதரவு அளிக்கும் என்று நயினார் நாகேந்திரன் சொல்லியிருந்த நிலையில், அதே பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளது, ஒரு பெருத்த முரணாக பார்க்கப்படுகிறது.

கண்டனம்

கண்டனம்

அதேபோல, ஜெய்ஹிந்த் என்ற விவாதமும் ஓடிக் கொண்டிருக்கிறது.. இதுகுறித்து ஈஸ்வரன் சட்டசபையில் பேசியதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்... அதிலும் பாஜக ஈஸ்வரனை சகட்டுமேனிக்கு விமர்சித்தன.. கண்டனமும் தெரிவித்தன.. வானதி சீனிவவாசன் முதல் எச்.ராஜா வரை வறுத்தெடுத்தனர்.

 ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

இப்படிப்பட்ட சூழலில்தான், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம், "இதுவரை மத்திய அரசு என்று சொல்லிவிட்டு தற்போது ஒன்றிய அரசு என்று சொல்லுவதில் சொல்லில் குற்றமில்லை.. அவர்களின் பொருளில் குற்றம் உள்ளது. அதேபோல, நீட் தேர்வு விவகாரம் இப்போதைக்கு முடியக்கூடியது இல்லை.. அந்த வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.. விலக்கு கிடைக்காது என்பது தெரிந்தும் திமுக அரசு இப்படி சொல்லி வருவது மாணவர்களை குழப்பத்தில்தான்ஆழ்த்தும்.

தாய்நாடு

தாய்நாடு

ஜெய்ஹிந்த் என்பது நமது நாடு நமது தேசம் அதன் மீதுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. ஜெய்ஹிந்த் என்றால் தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்பது பொருள். தனது தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்று சொல்வதில் அவருக்கு தயக்கம் என்று சொன்னால் அவர்கள் எந்த நாட்டில் சென்று வாழப் போகிறார்கள்? ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டமன்றத்தில் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை" என்றார்

 ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

நயினாரின் இந்த பதில் மறுபடியும் பாஜகவுக்கு தூக்கு வாரிப்போட்டுள்ளது.. இதையடுத்து சூட்டோடு சூடாக எல்.முருகன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.. "ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுபடுத்தியதற்காக முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்... இனி நடக்க போகும் சட்டமன்ற கூட்டங்களில் பாஜகவினர் பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்புவார்கள்" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாஜக

பாஜக

இந்த விவகாரம்தான் பாஜகவுக்குள் வெடித்துள்ளது.. நயினார் ஒன்று சொல்ல, மற்றவர்கள் வேறு ஒரு கருத்தை முன்வைக்க தொண்டர்களிடம் குழப்பம் துவங்கி உள்ளது.. ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டமன்றத்தில் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்று நயினார் சொல்வதுதான் சரியா? அல்லது அப்படித்தான் அந்த முழக்கத்தை சொல்வோம் என்று எல்.முருகன் சொல்வது சரியா? நீட் தேர்வுக்கு விலக்கு கோரினால் ஆதரவு கோருவோம் என்று நயினார் சொன்னது சரியா? அல்லது விலக்குகோரி பாஜக கோர்ட்டுக்கு சென்றது சரியா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+