Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமர் பிரசாத் கைதுக்கு நிஜ பின்னணி இதுவா? அண்ணாமலை பாதயாத்திரையை கெடுக்க சதியாம்.. கொதிக்கும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை தடுக்கவே அதன் இணை பொறுப்பாளரான அமர் பிரசாத் ரெட்டியை திமுக அரசு கைது செய்திருப்பதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர். அண்ணாமலையின் லெஃப்ட் ஹேண்ட் நான் தான் எனக் கூறிக் கொள்பவர். தொடர்ந்து பேட்டி, ட்வீட் என ஆக்டிவ்வாக இருந்து வருபவர். நாள்தோறும் திமுகவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருபவர்.

BJP leaders says that Amar prasad reddy was arrested to disrupt annamalai padayatra

அமர் பிரசாத் கைது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரைக்கு இணை பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. அவரது மேற்பார்வையின்படி, அண்ணாமலையின் நடைபயண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை வீட்டுக்கு அருகே பாஜக கொடிக்கம்பம் நடப்பட்ட நிலையில், அனுமதி இன்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டபோது, ஜேசிபி இயந்திரத்தை சேதப்படுத்தி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்த கைது, அண்ணாமலையின் யாத்திரையை முடக்குவதற்கான சதி என பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் கொதிப்பு: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் இது ஜனநாயக விரோதமானது." எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், "மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் எழுச்சியை கண்டு அஞ்சிய திறனற்ற திராவிட முன்னேற்ற கழக அரசு எப்படியாவது யாத்திரையை முடக்குவதற்கு அதன் ஏவல் துறையை விட்டு என் மண் என் மக்கள் யாத்திரையின் இணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டியை தற்பொழுது காரணம் இன்றி கைது செய்துள்ளது.

இவ்வாறு திமுகவிற்கு பணிவிடை செய்யும் தமிழ்நாடு காவல்துறையையும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஊழல் அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கைதுக்கெல்லாம் அஞ்சியவர்கள் நாங்கள் இல்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புரிந்து கொள்ள செயல்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

காரணமே இல்லாமல்: பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன், "அமர் பிரசாத் ரெட்டி அவர்களை கைது செய்து திமுக அரசு நமது கட்சியின் குரலை நசுக்க நினைக்கிறது. எத்தனை நபர்களை கைது செய்வீர்கள்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்று பல கைதுகளை செய்துவிட்டது. ஆனால் நமது கட்சி மேலும் மேலும் வளர்கிறது என்பதுதான் அவர்களின் தோல்வி. அமர் பிரசாத் ரெட்டி அவர்களை சரியான காரணமே இல்லாமல் கைது செய்துள்ள திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தனது எக்ஸ் வலைதள பதிவில், "நண்பர்
அமர் பிரசாத் ரெட்டி தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். காவல்துறை ஏவல்துறையாக மாறி வெறிகொண்டு எதிர்கட்சியைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரையின் பொறுப்பாளாராக நண்பர் அமர் பிரசாத் ரெட்டி இருக்கும் நிலையில், மாநிலத்தலைவரது யாத்திரையை முடக்குவதற்காகவே இந்த கைது நடத்தப்பட்டிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரையை முடக்க: பாஜக தேசிய நூலகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பாஜக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் எழுச்சியை கண்டு அஞ்சிய திறனற்ற திமுக அரசு எப்படியாவது யாத்திரையை முடக்கும் நோக்கில் யாத்திரையின் இணைப் பொறுப்பாளர் சகோதரர் அமர் பிரசாத் ரெட்டியை காரணம் இன்றி கைது செய்துள்ளது.

அரசியல் களத்தில் பாஜகவை எதிர்க்க திராணி அற்ற முதல்வர் ஸ்டாலின், தனது காவல் துறையை ஏவிவிட்டு, பாஜகவின் நிர்வாகிகளை கைது செய்வது கோழைத்தனம். இந்தக் கைதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். "நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்பதை திமுகவினரும், ஆட்சியாளர்களும் மனதில் வைத்துக் கொள்ளவும். வாய்மையே வெல்லும்." எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார், "என் மண் என் மக்கள் யாத்திரையின் மாபெரும் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத திராவிட மாடல் அரசு, இந்த யாத்திரையை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்திருப்பது முதல்வரின் அரசியல் முதிர்ச்சியின்மையையும் பயத்தையும் காட்டுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+