சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கண் சிவந்த" மேலிடம்.. அந்த ஒரே ஒரு வார்த்தை.. கமலாலயம் போட்ட போடு.. கோபத்தில் திமுக

நாராயணன் திருப்பதி, உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எனக்கும் செங்கல்லுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்" என்று உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு, தமிழக பாஜக கிண்டலடித்துள்ளது.

2015-ல் இருந்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்ற பேச்சு உள்ளது.. தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தம் 4 மாநிலங்களில் இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது..

மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் தருவாய்க்கே வந்துவிட்டது.. ஆனால், நமக்கு இன்னும் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.

மொழி, ஜாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் திமுக-பாஜக நாராயணன் பகீர் ட்வீட் மொழி, ஜாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் திமுக-பாஜக நாராயணன் பகீர் ட்வீட்

 ஒதி ஒதுக்கீடு

ஒதி ஒதுக்கீடு

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை.. அரசாணை வெளியிடவில்லை.. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.. திட்ட அறிக்கையும் ரெடியாகவில்லை.. நிலம் ஒப்படைக்கப்படவில்லை.. என முன்பு நிலவிய பல்வேறு புகார்களுக்கு பதிலும் இல்லை... ஒருகட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்கவும் இந்த விவகாரம் மீண்டும் சலசலப்பை தந்தது.

திரைமறைவு

திரைமறைவு

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடம் தேர்வில் அதிமுக- பாஜக இடையே நீடிக்கும் திரைமறைவு அரசியல் மோதலே இந்த தாமதத்துக்கு காரணம் என்று ஒரு பேச்சும் உள்ளது.. எனினும், எய்ம்ஸ் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அதை பெரும்பாலான கட்சிகள் விமர்சித்து வருகின்றன.. "எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழக அரசு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்துள்ளது" என்று ஸ்டாலின்கூட முன்பு ஒருமுறை அறிக்கை விடுத்திருந்தார்.

 சூப்பர் பிரச்சாரம்

சூப்பர் பிரச்சாரம்

இதற்கு பிறகு கடந்த சட்டசபை தேர்தலின்போது, உதயநிதி இந்த பிரச்சனையை கையில் எடுத்தார்.. மற்றவர்களை போல சீரியஸாக விவாதிக்காமல், குற்றம் சொல்லாமல், எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ஒரே ஒரு செங்கல்லை எடுத்து போனார்.. பொதுமக்களிடம் பேசி கொண்டே இருக்கும்போது, திடீரென இந்த ஒத்த செங்கல்லை தூக்கி காட்டியது, பரவலான பிரச்சார வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது.

 கிரிஸ்ப்பி

கிரிஸ்ப்பி

ஷாட் & கிரிஸ்ப்பி முறையில், நல்லா புரியும்படியாக, தெளிவாக, சிம்பிளா, எதார்த்தமாக பேசினார்.. அதாவது, உதயநிதி ஒரு செங்கலை கையில் தூக்கியதுமே சிரிக்கறாங்க, என்றால் பார்த்துக்குங்களேன்.. அந்த அளவுக்கு ஒற்றை செங்கல் ரீச் ஆனது.. திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் இது போன்ற பிரச்சாரம் ஒரு காரணமாகவும் அமைந்தது. ஆனால், இதை பார்த்து பாஜகவுக்கு டென்ஷன் எகிறிவிட்டது.. கடந்த வருடம் உதயநிதி மீது போலீசிலும் புகார் தந்தார்கள்..

 கிப்ட் தந்த திமுகவினர்

கிப்ட் தந்த திமுகவினர்

இப்போதும் அதுபோலவே ஒரு புகார் தந்துள்ளனர்.. காரணம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் கணேசன் இல்லத் திருமண விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசியபோது, மணமக்கள் இருவரும் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது.. இப்போது பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பதுபோல இருக்கக்கூடாது.. என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, எய்ம்ஸ் செங்கல்லை நினைவுபடுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் கல்லைப் போல் நினைவு பரிசை திமுகவினர் அந்த மேடையில் வழங்கினர்... அந்த பரிசைப் பார்த்ததுமே உதயநிதி ஸ்டாலின் மகிழ்ந்து ரசித்தார்.

 திருட்டு பட்டம்

திருட்டு பட்டம்

ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திருட்டு புகார், புதுக்கோட்டை போலீசில் தரப்பட்டுள்ளது.. மருத்துவமனை கட்ட வைக்கப்பட்டிருந்த செங்கல்லை அவர் திருடி விட்டதாகவும், அதனால், உதயநிதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர்... இதனிடையே, கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "எனக்கும் செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை" என்று கூறியிருந்தார்..

 நாராயணன் பதிலடி

நாராயணன் பதிலடி


உதயநிதியின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக பதிலடி தந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி, "எனக்கும் செங்கல்லுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்: உதயநிதி ஸ்டாலின் = "செங்கல்லும் களிமண்ணுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்" என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.. இந்த ட்வீட்டுக்கு திமுகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்

கரெக்‌ஷன்

கரெக்‌ஷன்

இப்படித்தான் 2 நாளைக்கு முன்பு, கல்வி கொள்கை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.. "தமிழ்நாட்டின் கல்வி கொள்கைபோல் வேறு எங்கும் இல்லை என்று முதல்வர் கூறியிருந்தார்.. அதற்கு நாராயணன், ஒரு சிறிய திருத்தம்.. கல்வி கொள்ளை போல என்று ஒரு எழுத்தை மாற்றி கரெக்‌ஷன் செய்திருந்தார்.. இந்த ட்வீட் அன்றைய தினம் முழுக்க வைரலானது குறிப்பிடத்தக்கது... அதாவது ஒரே ஒரு வார்த்தை அல்லது ஒரே ஒரு எழுத்தை வைத்தே, திமுகவை டேமேஜ் செய்வதுதான், நாராயணனின் "டெக்னிக்" விமர்சனமாகும்..!

English summary
bjp narayan tirupati has criticized udhayanidhi stalin and tweeted about it நாராயணன் திருப்பதி, உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X