மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் சொன்னது உண்மையா? இல்லையா? - எ.வ.வேலுவுக்கு பாஜக நாராயணன் கேள்வி!
சென்னை : "எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்கள் நல திட்டங்களையும், கட்டமைப்புகளை பெருக்கும் திட்டங்களையும் தொடர்ந்து எதிர்த்த திமுக, இப்போது எதிர்க்கவே இல்லை என்று கூறுவது திராவிட மாடல் புளுகா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, "சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது " மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மையா இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாராயணன் திருப்பதி.
எட்டு வழிச்சாலை போடக்கூடாது என திமுக சொல்லவில்லை என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எ.வ.வேலு
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் 8 வழிச்சாலை குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், "திமுக எட்டு வழிச் சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்சனையை தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள். 8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை" என்று கூறியதாக அமைச்சர் எ.வ.வேலு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மையா இல்லையா?
இந்நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்கள் நல திட்டங்களையும், கட்டமைப்புகளை பெருக்கும் திட்டங்களையும் தொடர்ந்து எதிர்த்ததோடு, சில தீய சக்திகள் செய்த பல்வேறு கலகங்களுக்கு தன் ஆதரவையும் அளித்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும், எதிர்க்கட்சியாக இருந்தபோது, "சேலம் எட்டுவ ழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது " - என்று 31/05/2019 மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மையா இல்லையா?

உண்மையா இல்லையா?
தேர்தல் வரை, பயத்தின் காரணமாக திட்டம் செயல்படுத்தப்படாது என்று பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மீண்டும் எட்டு வழி சாலை பற்றி பழனிச்சாமி பிதற்ற ஆரம்பித்து விட்டார் என்று டி.ஆர்.பாலு, 13/07/2019 அன்று சொன்னது உண்மையா இல்லையா? மக்களின் நலனுக்காக எட்டு வழிச் சாலை திட்டத்தை மத்திய மாநில அரசு உடனே கைவிட வேண்டும்- என்று 06/06/2020 அன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னது உண்மையா இல்லையா?

பிரதமரிடம் கோரினாரே?
திமுக ஆட்சி அமைந்த பின், '17 / 06 / 2021 அன்று இந்திய பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய சுருக்க உள்ளடக்க குறிப்பின் 15 (e)ன் படி , சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது ' என்று தமிழக அரசின் செய்தி வெளியீடு எண் : 292ல் குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா? : சேலம் எட்டு வழி சாலை என்பது மிக அவசியமான ஒன்று என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

மக்களை தூண்டிவிட்டு
எதிர்க்கட்சியாக இருந்தபோது , அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே மக்களை தூண்டிவிட்டு, சில தீய சக்திகளுக்கு துணை நின்று இந்த திட்டத்தை எதிர்த்த திமுக, இன்று ஆட்சியில் அமர்ந்த பின் கட்டமைப்பை பெருக்க வேண்டுமானால், பொருளாதார வளர்ச்சி வேண்டுமானால், தொழில்துறையில் முன்னேற்றம் வேண்டுமானால், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டுமானால் எட்டு வழிச்சாலை அவசியம் என்பதை தற்போது உணர்ந்துள்ளது.

திராவிட மாடல் புளுகு?
எதிர்க்கட்சியாக இருந்தபோது, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்று அடுக்கிக் கொண்டேயிருந்த திமுக, இப்போது ' 8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என்று சொல்வதற்கு பெயர் 'திராவிட மாடல் புளுகா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications