வட மாநிலத்தவருக்கு பணிகளை வழங்கி தமிழர்களுக்கு அநீதி.. “இது நியாயமா? நீதியா?” பாஜகவே பொங்கிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக பொங்கி எழும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநில அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதோடு, வட மாநிலத்தவர்களுக்கு வழங்கி தமிழர்களுக்கு அநீதி இழைக்கலாமா? துரோகம் செய்யலாமா? இது நியாயமா? நீதியா? என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வட மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டில் அதிகம் பணிபுரியக்கூடிய நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்ற நிலை ஏற்படுவதாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பாஜகவும் இதுகுறித்து தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளது.

வெளிமாநிலத்தவர்கள்

வெளிமாநிலத்தவர்கள்

மத்திய அரசு தேர்வில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், வட மாநிலத்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 துணை மின் பொறியாளர் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. அதில் ஆந்திரா, கேரளா, மகாராட்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த 38 பேர் தேர்வானார்கள்.

வட மாநிலத்தவருக்கு பணி

வட மாநிலத்தவருக்கு பணி

தமிழ்நாட்டில், பொறியியல் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையில் வெளிமாநிலத்தவர் 38 பேர் தமிழ்நாடு மின் வாரியத்தில் துணை மின் பொறியாளர் பணிக்கு நியமனம் செய்யப்பட்டது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே பணியிடம் என மாற்றியமைக்கப்பட்டது.

பாஜக குற்றச்சாட்டு

பாஜக குற்றச்சாட்டு

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மின் வாரிய பணிகளில் வட மாநிலத்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டு வருவதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) பணியாற்றுவோரின் எண்ணிக்கை சுமா‌ர் 84,000. ஒவ்வொரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூபாய் 1.24 செலவிடப்படுகிறது.

அநீதி இழைக்கலாமா? இது நியாயமா?

அநீதி இழைக்கலாமா? இது நியாயமா?

ஊழியர்களுக்கு அதிகமாக செலவிடுவதில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. ஆனாலும், தனியார் ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது, அதிலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவது ஏன்? மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக பொங்கி எழும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதோடு, வட மாநிலத்தவர்களுக்கு வழங்கி தமிழர்களுக்கு அநீதி இழைக்கலாமா? துரோகம் செய்யலாமா? இது நியாயமா? நீதியா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+