Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொறுங்கிய "காவி" கணக்கு.. இறங்கி அடித்த திமுக.. சிலிர்த்தெழும் திராவிட மாடல்.. டக்கென திரும்பிய பாஜக

கொங்குமண்டல பாஜகவுக்கு, திமுக பிரம்மாண்ட கூட்டம் நடத்தி செக் வைத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு கணக்குகளை போட்டு, எம்பி தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கும், கொங்கு பாஜகவின் கனவை, திமுக நொறுக்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.. அதை நிரூபிக்கும் வகையில்தான் நேற்றைய தின நிகழ்வுகள் நடந்துள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கணித்து கூறுகிறார்கள்.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் பாஜகதான் முதல் கட்சியாக, களத்தில் இறங்கி உள்ளது.

தென் இந்தியாவில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று அமித்ஷாவே, பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு மேலிடம் கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகிறது.

 வானதி + சேலஞ்ச்

வானதி + சேலஞ்ச்

"கோவையின் ஒரு வார்டில் தோற்றால்கூட, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்" என்று வானதி சீனிவாசன், உள்ளாட்சி தேர்தலின்போது சவால் விட்டிருந்த நிலையில், தற்போது எம்பி தேர்தலுக்கான முனைப்பில் கோவை இறங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக முனைப்பு காட்ட துவங்கியிருக்கிறது.. இதற்காக 2 விதமான வியூகங்களை பாஜக மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின..

 மடாதிபதிகள் & ஆதீனங்கள்

மடாதிபதிகள் & ஆதீனங்கள்

அதன்படி, திமுகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டுவது, அந்த கட்சிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வைப்பது, அவைகளில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி தந்து, டெல்லியில் உட்கார வைத்து, திமுகவுக்கு டஃப் கொடுப்பது.. இதுதான் அந்த முதல் பிளானாம். இரண்டாவதாக, இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுகவை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும்.. ஆனால், இந்த செயலை, அரசியல் கட்சிகள் மூலம் இல்லாமல், மடாதிபதிகள், ஆதீனங்கள், வைத்து, திமுகவுக்கு எதிராக பேச வைப்பதாம்..

 டபுள் டிஜிட்

டபுள் டிஜிட்

இதன்மீது திமுக மீது வெறுப்பை கக்க வைத்து, வரப்போகும் தேர்தலில் 10 சீட் அதாவது டபுள் டிஜிட் சீட்களையாவது தமிழகத்தில் பெற வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார்கள். கொங்குவில் ஓரளவு பெருகிவரும் தங்கள் ஆதிக்கத்தையும், செந்தில் பாலாஜி நொறுக்கி தள்ளிவிட்டு, திமுகவை முதன்மைப்படுத்தி வருவதால், அவர் மீது பாஜக, இந்து ஆதரவாளர்கள் கடுப்பை காட்டி வருவதாகவே கூறப்பட்டது.. அதற்கான அறிகுறிதான் கடந்த 2 மாதமாகவே தமிழகத்தில் தென்பட்டு வருவதாகவும், அதன் முதல்குறியே செந்தில்பாலாஜிதான் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

 காடேஸ்வரா சுப்பிரமணி

காடேஸ்வரா சுப்பிரமணி

இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்ரமணி இதற்கான முதல் மணியையும் அடித்திருந்தார்.. "விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும்... ஏனென்றால், செந்தில் பாலாஜி 40 எம்எல்ஏக்களின் ஆதரவை வைத்துள்ளார் என தகவல்கள் வருகின்றன.. தமிழக அரசியல் விரைவில், தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் போல் மாற உள்ளது" என்று பேசியிருந்தார்.. கோவை திமுகவுக்குள் குழப்பத்தையும், செந்தில் பாலாஜி மீதான நல்லெண்ணத்தையும் கெடுப்பதற்காக இவ்வாறு பழி கூறப்படுவதாகவே அப்போதே திமுகவில் கண்டனங்கள் எழுந்தன.

ஆச்சரியப்பட்டி

ஆச்சரியப்பட்டி

இதற்கெல்லாம் சேர்த்து நேற்றைய தினம், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, செந்தில்பாலாஜி மீதான தன்னுடைய கனமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.. "கட்சியில் 50 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர்.. அவர்கள் யார், அவர்களுடைய முகவரி, கட்சிப்பதவி, செல்போன் நம்பர் ஆகிய அனைத்தையும் செந்தில்பாலாஜி கொடுத்தார்.. எதையும் வெறுமனே கணக்கு காட்டுவதற்காக அவர் அப்படி சொல்வது கிடையாது.. இன்னும் சொல்லப்போனால் எண்ணிக்கையைவிட எண்ணம் முக்கியம் என்று நினைக்கக்கூடியவர் நம்முடைய செந்தில்பாலாஜி.. அந்த வகையில், பெள்ளாச்சியில் இருக்கக்கூடிய ஆச்சிப்பட்டியானது, ஆச்சர்யப்பட்டியாக எனக்கு காட்சியளிக்கிறது" என்று பூரித்து சொன்னார்.

பொய்க்கணக்குகள்

பொய்க்கணக்குகள்

40 எம்எல்ஏக்களை கையில் வைத்துக் கொண்டு செந்தில்பாலாஜி, திமுகவை மிரட்டப்போகிறார் என்ற பொய்க்கணக்குகள் அனைத்தும் நேற்றைய தினம் நொறுங்கிவிட்டன.. அதேபோல, கடந்த 6 மாத காலமாக தமிழக பாஜக தலைவரை எடுத்துக் கொண்டால், ஊழல் பட்டியல், ஊழல் லிஸ்ட்களை வெளியிட்டும், அது தொடர்பாக பேசியும் வருகிறார்.. இதில் முதல் நபராக மட்டுமின்றி, அதிக முறையும் உச்சரிக்கப்பட்ட பெயர் செந்தில் பாலாஜிதான்..

 மைதிலி வினோ

மைதிலி வினோ

சில புள்ளிவிவரங்களைகூட பாஜக தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் வரை புகார் பட்டியல் சென்றுவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இன்று அதற்கான அறிகுறி என்னவென்று தெரியவில்லை.. ஆனால், அதற்கு பதிலாக, அந்த கட்சியில் இருந்து வெளியேறி, திமுகவில் இணைந்துள்ள மைதிலி வினோ, புதிதாக கோவை பாஜகவில் நிலவும் லஞ்ச விவகாரத்தை லிஸ்ட் போட்டு காட்டியுள்ள நிலையில், கோவைக்கே இது அதிர்ச்சி தானாம்.

 25 400 273

25 400 273

அதேபோல கொங்கு மண்டலங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அண்ணாமலை பேசியபோது, "தமிழக மக்கள் இந்த ஒரு வருடத்தில்தான் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டனர்.. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும், 400 எம்பிகளுடன் வெற்றி பெற்று மோடிஜியை மீண்டும் உட்கார வைக்க வேண்டும்.. மெஜாரிட்டிக்கு 273 எம்.பி போதும் என்றாலும், இந்த அமெரிக்காக்காரனை எல்லாம் மிரட்ட வேண்டும்" என்று கூறியிருந்த நிலையில், இதே கொங்கு மண்டல அதிமுக, பாஜகவில் இருந்து 50 ஆயிரம் பேர் திமுக பக்கம் சென்றது இரு கட்சிகளுக்குமே அதிர்ச்சியை தந்து வருகிறது.

 காவி மண்

காவி மண்

"திராவிட மாடலை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" என்று இதே கோவையில் ஸ்டாலின் பஞ்ச் வைத்து பேசியிருந்ததையும், பாஜக கவனிக்காமல் இல்லை.. கொங்குவில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் காவியையும், திராவிட மண்ணாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் கடினமான உழைப்பின் தேவை, இனிமேல்தான் கூடியுள்ளதாகவே கருதப்படுகிறது.. திமுகவை ஓவர்டேக் செய்து, பலமான வியூகங்களால் திமிறி எழுமா பாஜக? பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+