ரஜினி "ஆளுநர்" ஆகிறாரா.. இந்த முறை மிஸ்ஸாகாதாம்.. 3 ப்ளான்களுடன் பாஜக.. ஜெயிலர்தான் கடைசி படமாமே..!
ரஜினிகாந்த்தை தமிழக கவர்னர் ஆக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறதாம்
சென்னை: தமிழக ஆளுநராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம், பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.. இதையடுத்து, இது தொடர்பான விவாதங்களும், கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் எழ ஆரம்பித்துள்ளன.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது.. இதற்காக தமிழகத்தை நோக்கி இப்போதே மேலிட பாஜக காய் நகர்த்த துவங்கிவிட்டது.
இதனிடையே, சமீபத்தில் ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார்.. அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கவில்லை என்கிறார் ரஜினி.

ஹார்ட் ஒர்க்
அத்துடன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநரை நிறைய புகழ்ந்து பேசினார். "30 நிமிடம் பேசினேன். அரசியல் விஷயமும் அவரிடம் பேசினேன்.. அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர்.. ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார்.. முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது.. இங்கே உள்ள ஆன்மீக உணர்வு அவர் மிகவும் நேசிக்கிறார்.. தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்லி உள்ளார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது" என்றார் ரஜினி.

ஈர்ப்பு + அறுவடை
அரசியல் காரணங்களுக்காக பேசினேன் என்று வெளிப்படையாக சொன்ன ரஜினி, அவைகள் என்ன என்பதை கூற மறுத்துவிட்டார்.. ஆளுநருடன் ரஜினி என்ன பேசியிருப்பார் என்ற யூகங்கள் வட்டமடித்து வந்தாலும், 2 விதமான பிரச்சனைகள் அப்போதே வெடித்தன.. அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினியே ஓபனாக அதே செய்தியாளர் கூட்டத்தில் சொல்லிவிட்டதால், எப்படியும் அவர் அரசியலுக்கு வரபோவதில்லை.. உடல்நலக்குறைவை காரணம் காட்டி, அரசியலில் ஈடுபடாமலேயே ஒதுங்கிவிடப்போவதாக அறிவித்த ரஜினியால், மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றார்கள் ஒரு தரப்பினர்..

கிசுகிசு
மற்றொரு தரப்பிலோ, எப்படியும் ரஜினியை பாஜக முழுமையாகவே பயன்படுத்தி கொள்ளக்கூடும், அவரை இந்த முறை லேசில் நழுவ விடாது என்கிறார்கள். அந்தவகையில்தான், கடந்த வாரம் ஒரு தகவல் கூடுதலாக கசிந்தது.. சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே இருப்பதால், இவைகளில் சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும், தமிழகத்தில் சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும், இழந்த ஆதரவை, அறுவடை செய்துவிடலாம் என்றும் பாஜக யோசித்து வருவதாகவும், இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பாஜக தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் முணுமுணுக்கப்பட்டது.

3 + பிளான்கள்
ஆனால், இப்போது விஷயம் என்னவென்றால், ஆளுநராகவே ரஜினியை கண்டிப்பாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.. இந்த செய்தியை இந்தியா டுடே நிறுவனம் செய்தியாகவும் வெளியிட்டுள்ளதுதான், அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஆரம்பத்தில் ரஜினிகாந்த்தை பாஜகவில் இணைக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் தீவிர முயற்சிகள் எடுத்து வந்தன. பிறகு, தனிக்கட்சியை ரஜினி தொடங்கினால், அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்து கூட்டணி வைக்கவும் மேலிடம் ஆசைப்பட்டன..

INDIA TODAY
ஆனால், எல்லாருக்குமே ரஜினி டாடா காட்டிவிட்டதால், ரஜினி மீது மேலிடம் சற்று வருத்தத்தில் இருந்ததாககூட சொல்லப்பட்டது. இப்போது எம்பி தேர்தலுக்கு பாஜக தயாராகிவரும் சூழலில், தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுக்கள் வட்டமடிக்க துவங்கி உள்ளன.. அந்தவகையில்தான், ரஜினிக்கு மீண்டும் குறி வைத்துள்ளது பாஜக. ரஜினிக்கு தமிழக ஆளுநர் பதவியை வழங்க இருக்கிறது பாஜக, அது தொடர்பாக ரஜினியிடம் பேசியதை அடுத்து தான் மரியாதை நிமித்தமாக ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார் ரஜினி என்று இந்தியா டுடே செய்தி தெரிவித்துள்ளது..

இளையராஜா
ஆளுநருடன் ரஜினி அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று அண்ணாமலை பேசியதையும், சமீபத்தில் இசைஞானி இளையராஜாவுக்கும் நியமன எம்பி பதவி பாஜக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது போல், ரஜினிக்கும் ஆளுநர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியாக ரீதியாக ரஜினி உடன்பட மறுப்பதால், பாஜக சாராத விழாக்களில் அவரை பங்கேற்க வைத்து பாஜகவுக்கு ஆதரவாக பேச வைக்கலாம் என்பதுதான் தற்போதைய மேலிடத்தின் பிளானாம்.

ப்ளான் + ஸ்கெட்ச்
ஆனால் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது, கட்சி ரீதியாக பேச முடியாவிட்டாலும் கூட பிரதமரை புகழ்ந்து பேசலாம், அவரது ஆட்சியை புகழ்ந்து பேசலாம், அது மக்களின் கவனத்திற்கும் செல்லும் என்றும் கணக்கு போடுகிறதாம். அந்தவகையில், 'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங் இப்போது துவங்கி உள்ளநிலையில், அடுத்தடுத்தும் ரஜினி படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன... ஒருவேளை அவர் ஆளுநர் பதவியை ஏற்பதாக இருந்தால் ஜெயிலர் திரைப்படம் தான் திரைவாழ்வில் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று தெரிகிறது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் கவர்னர், ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார் (பிரிவு 155). ஆளுநராக நியமிக்கத் தகுதிபெறும் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.அதேநேரம், ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவரை அதே மாநிலத்திற்கு ஆளுநராக நியமிப்பது மரபு கிடையாது. தமிழிசை கூட அண்டை மாநிலமான புதுச்சேரிக்குதான் ஆளுநராக்கப்பட்டார். ஆனால் ஏன் தமிழக ஆளுநர் ரஜினி என செய்திகள் வெளியாகின்றன என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
ரஜினி பற்றி ஆதவ் சொன்ன கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த தக் லைஃப் பதில்.. குவியும் கமெண்ட்ஸ்











Click it and Unblock the Notifications