கண்ணசைத்த "மேலிடம்".. குறுக்கே வரும் "தலை".. மலர போகும் தாமரை.. ரெடியாகும் கூட்டணி.. அப்ப எடப்பாடி?
தமிழகத்தில் 3வது அணி அமைந்தால், அதற்கு யார் தலைமை பொறுப்பேற்பார்கள்
சென்னை: தமிழக அரசியலில் தினம் தினம் புயல் அடித்து கொண்டிருக்க, சைலண்ட் ஆக்ஷனில் பாஜக இறங்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, தனித்து போட்டியிட்ட வரலாறு கிடையாது.. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேசமயம், அந்த பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்வதும் இல்லை.. அதிமுகவுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்கவே நேரம் போதவில்லை என்பதால், இதை பாஜகவும் சரியாக பயன்படுத்தி கொண்டு வருவதுடன், கட்சியும் வளர ஆரம்பித்துவிட்டது..

வீக்னஸ்
இப்போது அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், அதிமுக 2 ஆக உடைந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்து அவருடன் எடப்பாடி செல்வாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடிக்கு பாதகமாக அமைந்துவிட்டால், அடுத்து அவர் என்ன செய்ய போகிறார்? அல்லது ஓபிஎஸ்ஸுக்கு எதிராக வந்துவிட்டால், அவர் என்ன செய்ய போகிறார்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.. எடப்பாடியை பொறுத்தவரை, ஓபிஎஸ்ஸின் பொதுக்குழுவில் கலந்து கொண்டு, இணக்கமாக சென்றால், கட்சி காப்பாற்றப்படும், இலையும் காப்பாற்றப்படும்..

பிளான் =1
இப்போது போலவே பிடிவாதம் தொடர்ந்தால், கட்சிக்கும் நல்லதல்ல, தொண்டர்களுக்கும் நல்லதல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அப்படி எடப்பாடி எதற்குமே, இணங்கி வராத சூழலில், எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைத்து பாஜக போட்டியிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், எடப்பாடி பொறுப்பில் இருந்தவரை, பாஜகவுக்கு பெருமளவு சீட்டுகளையோ, தொகுதிகளையோ தந்ததில்லை.. மறைமுக எதிர்ப்பு அரசியல் காரணமாக பாஜகவுக்கான ஓட்டுக்களும் குறைந்துவிட்டதாகவே பாஜக நினைக்கிறது..

பிளான் = 2
எடப்பாடிக்கு முன்பு இருந்த அரசியல் வரை, தனித்தோ அல்லது திமுக அணியில் இருந்தாலோ எம்பி தேர்தல்களில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது என்பதையும் அக்கட்சி கணக்கு போட்டு பார்க்கிறது. அதனால்தான், தனித்து போட்டியிடலாமா அல்லது, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், பாமக, தேமுதிக, என அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்கலாமா? என்று யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். அப்படி 3வது அணியை அமைக்கும்பட்சத்தில், டிடிவி அதற்கு தலைமையேற்று வழிநடத்த ஆர்வமாகவே இருப்பதாகவே தெரிகிறது..

பிளான் = 3
அவர் கூட்டிய பிரம்மாண்டமான பொதுக்குழு, ஓபிஎஸ் மீதான கரிசனம், எடப்பாடி மீதான அதே கோபம், பாஜக மீதான பிடிப்பு, போன்ற அனைத்து பிளஸ் பாயிண்ட்களுடன் களத்தில் முன்னே நிற்பதாக தெரிகிறது.. அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடிய பண்புகள் டிடிவிக்கு உள்ளதாக அமமுகவில் மட்டுமல்லாமல், அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், இதற்கு பாஜக ஒப்புக்கொள்ளுமா? என்ற சந்தேகமும் எழுகிறது.. பாஜக தலைமையிலான 3வது அணி அமைய வேண்டும் என்ற பிளானும் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.. இதற்காகத்தான் ரஜினியை உள்ளே கொண்டு வர முயற்சிப்பதாகவும் தகவல்கள் 20 நாட்களுக்கு முன்பேயே கசிந்தன..

தாமரைகள்
ஒவ்வொருமுறையும், கூட்டணி வைத்து, கூட்டணி தலைமை ஒதுக்கும் சொற்ப சீட்களை பெறுவதைவிட, இந்த முறை தலைமை பொறுப்பேற்று, பாஜகவின் வலிமையை காட்டவும், அதன்மூலம் பெரும்பான்மையான இடங்களில் தாமரைகளை மலர வைக்கவும் யோசித்து வருகிறதாம். அதற்காக டிடிவியுடன் கருத்து வேறுபாடு என்று அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியாது. எப்போதுமே டிடிவி மீது, ஒரு சாஃப்ட் கார்னர் மேலிடத்துக்கு உண்டு என்பதால், அவரை தங்கள் பக்கம் இழுக்கவே கடந்த எம்பி தேர்தலின்போதே முயற்சி எடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அது முடியாமல் போகவும், இந்தமுறை அந்த வாய்ப்பு அதிகம் உள்ளது..

கரிசனங்கள்
இதற்கு ஒரு உதாரணமும் சொல்லப்படுகிறது. இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திகார் சிறை வரை தினகரன் சென்றிருந்தார் என்பதை நாடறியும்.. இப்போது அது தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், டிடிவி பெயரே அதில் இல்லை... இதுவே பாஜக தரும் பச்சை சிக்னலாகவே பார்க்கப்படுவதுடன், டிடிவி மீதான கரிசனம் கூடுதலாகி உள்ளதாகவும் கருதப்படுகிறது.. அந்தவகையில், பாஜகவுடன் டிடிவி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது.. அதேசமயம், சசிகலாவின் அமைதி பலவித சந்தேகங்களை உண்டாக்கியும் வருகிறதாம். காரணம், அதிமுக விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.. அதிலும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை குறித்து வாயே திறக்கவில்லை.. கருத்தும் சொல்லவில்லை..

சசி பாலிட்டிக்ஸ்
எடப்பாடிக்கு ஜெயச்சந்திரன் உத்தரவு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், இது சசிகலாவுக்கும் மகிழ்ச்சி என்றாலும், கட்சியின் பொதுச்செயலாளர் இன்னமும் தான் மட்டுமே என்ற முடிவில் இருப்பதால்தான், அமைதி காப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால், கட்சியை ஓபிஎஸ் கைப்பற்றி, அதை சசிகலாவிடம் ஒப்படைக்க நேர்ந்தால், 3வது அணி சசிகலா தலைமையில் அமையுமா? என்ற கேள்வியும் எழுகிறது.. தேர்தலுக்கு வியூகங்களை பாஜக முன்னெடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் 3வது அணி அமையுமா? அப்படியே அமைந்தால் அதற்கு தலைமை, டிடிவியா? பாஜகவா? சசிகலா? தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications