Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் SIRஐ ஆதரித்த பாஜக.. மேற்கு வங்கத்தில் எதிர்ப்பது ஏன்? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளை தமிழ்நாட்டில் தீவிரமாக ஆதரிக்கும் அதே பாஜக.. மேற்கு வங்கத்தில் இதை கடுமையாக எதிர்க்கிறது. இதற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சரிபார்க்குமாறு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இன்று இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) வலியுறுத்தியுள்ளது.

voting vote

பாஜகவின் மூத்த தலைவர் அமித் மாளவியா தலைமையிலான குழு, டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்த பிறகு இந்த கோரிக்கையை முன்வைத்தது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாளவியா, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பல ஆவணங்கள் சட்டவிரோதமானவை என்றும், அவை முழுவதுமாக போலியானவை என்றும் குற்றம் சாட்டினார்.

பூத் நிலை அலுவலர்கள் (BLO) மாநிலத்தில் அச்சுறுத்தப்படுவதாகவும், மிரட்டப்படுவதாகவும் கூறப்படும் புகார்களையும் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாஜக புகார்

அதாவது SIR காரணமாக பொய்யான ஆவணங்கள் மூலம் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையை வாங்க முடியும் என்று பாஜக வாதம் வைக்கிறது. மேலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLOs) திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்பு இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலுக்கு பாஜக தலைவர் சிஷிர் பஜோரியா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "மேற்கு வங்கம் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ளதால், கட்சி சார்புள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் ஏற்படும் தவறுகளை சரிசெய்ய வாய்ப்பிருக்காது.. அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புகள் உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக)

இந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி கவனத்திற்குக் கொண்டுவந்த போதிலும், முறையற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமனங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பஜோரியா சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக திரிணாமுல் கட்சித் தொண்டர்களாகவோ அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) மூலம் தொடர்பு கொண்டவர்களாகவோ உள்ளனர் என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்தார்.

நந்திகிராம் மற்றும் நந்தகுமார் பகுதிகளைச் சேர்ந்த 13 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆளும் திரிணாமூல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி பாஜக SIR திட்டத்தை விமர்சனம்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த திரிணாமுல் தலைவர்கள், மாநிலத்தில் 80,000 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருப்பதாகவும், அவர்களில் சிலர் ஆளும் கட்சியை ஆதரிக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், அவர்கள் தங்கள் கடமைகளை பாரபட்சமின்றியும், பயம் அல்லது தயவின்றி நிறைவேற்றினால் தவறில்லை என்று தெரிவித்தனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் இரண்டாம் கட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்.

முதல் கட்டப் பணிகள் பீகாரில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும்.

சட்டமன்றத் தேர்தல் நடக்கும் முன் SIR

இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முதற்கட்டமாக, இந்த மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் 2002, 2003, 2004 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடப்படும். இந்த பணி உடனடியாகத் தொடங்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், "இரண்டாம் கட்டப் பணியில் 51 கோடி வாக்காளர்கள் இடம்பெறுவார்கள்" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 அன்று நிலுவையில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+