ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பாஜக பால்கனகராஜுக்கு என்ன தொடர்பு? பறந்த சம்மன்.. அவரே சொன்ன விளக்கம்
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜராகினார். போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் தனக்கு நல்ல நண்பர் எனவும், கொலை வழக்குகளில் ரவுடி நாகேந்திரன், சம்போ செந்தில் ஆகியோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் மட்டுமே தனக்கு சம்மன் அனுப்பட்டுள்ளதாகவும் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட திருவேங்கடம் தவிர்த்து தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் உள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஏற்கனவே மற்றொரு வழக்கில் சிறையில் இருக்கும் நாகேந்திரனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். பிரபல வழக்கறிஞர் பால் கனகராஜ், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகியாக இருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் பால் கனகராஜ் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புள்ளதாக கருதப்படும் ரவுடி நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக பால் கனகராஜ் பணியாற்றிய நிலையில், அவர் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதனையடுத்து அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கொலை தொடர்பாகவும், ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உடனான வழக்குகள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் தனக்கு நல்ல நண்பர் எனவும், கொலையில் தனக்கு தொடர்பிருப்பதாக சம்மன் அளிக்கப்படவில்லை எனவும் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,"ஆம்ஸ்ட்ராங் எனக்கு நல்ல நண்பர்.. வழக்கறிஞர் என்ற முறையில் நாங்கள் நண்பர்களாகவே பழகி இருக்கிறோம்.. ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்த பகையும் பிரச்சனையும் இருந்தது கிடையாது. தற்போது இந்த வழக்கில் நான் இரண்டாவது முறையாக ஆஜராகி இருக்கிறேன். ஆனால் முதன்முறை ஆஜராகி இருப்பது போல அவதூறு பரப்புகிறார்கள். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே கைதாகி இருக்கும் சிலருக்கு நான் வழக்கறிஞராக ஆஜராகி இருக்கிறேன். அதன் காரணமாகவே எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. நான் விசாரணைக்கு ஆஜராகி போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.. மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை" எனக் கூறியுள்ளார்.
-
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications