பாஜக ராகுலுக்கே தண்ணி காட்டி.. 100 நாள் வேலையை காலி செய்து.. காந்தி பெயரிலேயே காங்கிரஸை முடக்கிய பலே
சென்னை: மத்திய அரசு 2026ம் ஆண்டு பட்ஜெட்டில் கிராமப்புற மக்களுக்காக ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது... ஆனால், கிராமப்புற மக்களுக்கான அறிவிப்பாக மட்டுமே இதனை பார்க்க முடியவில்லை.. காங்கிரசுக்கு பாஜக வைத்திருக்கும் செக் என்றே தெரிகிறது.. ஏன் தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!!
கடந்த 20 வருடங்களாக கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலை உறுதித் திட்டம் இப்போது அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக "மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ்" என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாஜக மாஸ்டர்ஸ்ட்ரோக்
இந்த மாற்றத்தின் முக்கியமான நோக்கம் என்னவென்றால், கிராமத்து மக்களின் உழைப்பை வெறும் கடினமான வேலைகளோடு நிறுத்திவிடக் கூடாது என்பதாகும்.
அதாவது, இதுவரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளம் வெட்டுவது, காடு திருத்துவது, குழி தோண்டுவது போன்ற வேலைகளே அதிகமாக செய்யப்பட்டன. ஆனால் இந்த புதிய திட்டத்தில் மக்களுக்கு என்னென்ன வேலை பிடித்துள்ளதோ, அல்லது அவர்கள் பாரம்பரியமாக செய்து வரும் கைத்தொழில்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.
100 நாள் வேலைத் திட்டம்
அதனால்தான், மண்பாண்டம் செய்வது, கைத்தறி நெசவு செய்வது அல்லது கைவினைப் பொருட்கள் தயாரிப்பது போன்ற தொழில்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது... வெறும் கூலி மட்டும் வாங்கும் தொழிலாளியாக இல்லாமல், ஒவ்வொருவரையும் ஒரு சிறு தொழிலதிபராக மாற்றுவதுதான் இந்த திட்டத்தின் பெரிய இலக்கு என்கிறது அரசு..
இந்த திட்டத்தால் எளிய மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரவும் நிச்சயம் உயரும் என்றாலும், இதற்குள்ளும் ஒரு அரசியல் இருக்கவே செய்கிறது..
ராகுல் காந்தி எதிர்ப்பு
ஏனென்றால் இந்த திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு பின்னால், ஒரு பெரிய விவாதமே தேசிய அரசியலில் வெடித்தது.. ஆரம்பத்தில் "விட்சித் பாரத்" என்ற பெயரில் இது அறிமுகமானபோது, காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது... ராகுல் காந்தி, சோனியா முதல் திமுகவின் கூட்டணி கட்சிகள் வரை கொந்தளித்து போய்விட்டார்கள்.. விவசாயிகள் கூட ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்..
ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து பாஜக இப்போது மீண்டும் காந்தியின் பெயரிலேயே "கிராம ஸ்வராஜ்" என்று பெயர் வைத்துள்ளது..
பெயரில் பழைய ஈர்ப்பு இருந்தாலும், இது முற்றிலும் ஒரு நவீன திட்டமாகும். இதன் மூலம் கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை உலக நாடுகளின் சந்தைகளுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தி பெயரில் திட்டம்
கிராமப்புற நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்குத் தேவையான நவீன பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களின் தயாரிப்புகளை உலகளாவிய சந்தைகளில் சந்தைப்படுத்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது
அத்துடன், இந்த அறிவிப்பின் மூலம் காந்தியின் பெயரை அரசு புறக்கணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆனால் இதை காங்கிரஸ் எப்படி அணுக போகிறது தெரியவில்லை.. பெயர் மாற்றத்தை தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக காங்கிரஸ் முன்னிறுத்தலாம், அல்லது பெயர் மாற்றத்தால் மட்டும் காந்தியின் கொள்கைகளை நிலைநாட்டிவிட முடியாது என்றும் பாஜகவை விமர்சிக்கலாம்.
மகாத்மா காந்தி பெயர்
எனினும், மத்திய பட்ஜெட்டில் இன்று மகாத்மா காந்தி பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இப்புதிய திட்டம், அரசியல் வட்டாரத்திலும் பொருளாதார தளத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ஒரு நடைமுறை சிக்கல் இருப்பதாக ஒரு தரப்பினர் கவலைப்படுகிறார்கள்.. அது என்ன தெரியுமா?
100 நாள் வேலைத் திட்டத்தையே முழுமையாக நம்பியிருந்த, எந்த ஒரு தனிப்பட்ட கைத்தொழிலும் தெரியாத ஏழை எளிய மக்களின் நிலை என்னவாகும்? என்பதுதான் அந்த கேள்வி...
ஒருவேளை, கூலி வேலை மட்டுமே செய்ய தெரிந்த சாமானியர்களுக்கு இந்த புதிய முறையில் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்குமோ? என்ற சந்தேகமும் கிளம்புகிறது..
ஆக,
பழைய முறை மாறி புதிய தொழில் முறை வருவது நல்ல விஷயம்தான்.. ஆனால், இது கடைக்கோடி மக்களின் வறுமையை உண்மையிலேயே போக்கிவிடுமா? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
செல்வப்பெருந்தகை திமுகவில் இணைகிறாரா? அந்த 1 முக்கிய லாபம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்












Click it and Unblock the Notifications