தாங்கி பிடிக்கும் பாஜகவுக்கே இந்த சோகம்னா.. அதிமுக அரசுக்கு எப்படி இருக்கும்!
பாஜக 5 மாநில தோல்வி.. தமிழக அரசை பாதிக்குமா? என தெரியவில்லை.
சென்னை: பாஜக எவ்வளவு சோகத்தில் இருக்கிறதோ தெரியாது. ஆனால் அதிமுக தரப்பில் நிச்சயம் உள்ளூர ஒரு கிலி உண்டாகியிருக்கும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்பது ஒட்டுமொத்த கட்சிகள், மக்களின் கருத்து.
அதை அதிமுக வலிமையாக மறுத்ததே இல்லை. பல அமைச்சர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசியும் வருகின்றனர்.

தலையில் குட்டு
அப்படி தங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ள பாஜகவே ஆட்டம் கண்டிருப்பதுதான் அதிமுக தரப்பையும் சேர்த்து அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே கைதூக்கி அரவணைத்தும், அவ்வப்போது தலையில் குட்டியும் வைத்து கொண்டிருப்பது மத்திய பாஜகதான்.

என்ன உணர்வோ?
ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று அதிமுக எதிர்பார்க்கவில்லை. அந்த பக்கம் சந்திரபாபு நாயுடு சிரித்து மகிழ்கிறார். இந்த பக்கம் பினராயி விஜயன் பூரிப்பில் உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ என்ன மாதிரியான உணர்வில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

குடுமிப் பிடி
இதில் 2 விஷயங்கள் உள்ளன. ஒன்று, எப்போதோ கவிழக்கூடிய ஒரு ஆட்சியை இன்றைக்கும் வரைக்கும் இழுத்து கொண்டு போய் கொண்டிருப்பது மத்திய பாஜகதான். ஆனால் இதெல்லாம் ஒன்றும் லாப நோக்கம் இல்லாமல் மோடி செய்யவில்லை. தமிழகத்தின் இயற்கை வளங்களுக்கு வழிவிடப்பட்டுள்ளது. மற்றொரு புறம் ஊழல் புகார் அமைச்சர்களின் குடுமிப்பிடியும் மோடியிடம் உள்ளது.

வலுவான காங்கிரஸ்
இன்னொரு காரணம், ஒரு மாநிலம், 2 மாநிலம் என்றால் பரவாயில்லை. ஒரேயடியாக 5 மாநிலங்களிலும் பாஜக இப்படி குப்புற விழுந்துவிட்டதால், காங்கிரசின் பலம் கூடியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமாக உள்ளது, வலுவாக உள்ளது என்று டெல்லி முதல் தமிழகம் வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள்.

ஸ்டாலின் ஆட்சி?
போதாக்குறைக்கு ஸ்டாலின் ஒரு பக்கம் சந்திரபாபு நாயுடு, ராகுலை சந்தித்து கலக்கி வருகிறார். வரப்போகும் தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு வந்தால் என்னாகும்? மத்தியிலும் ராகுலும், மாநிலத்தில் ஸ்டாலினும் வந்துவிட நிறைய வாய்ப்புள்ளது. எனவே இந்த 5 மாநில தேர்தல் பாஜகவுக்கு எவ்வளவு அடியை, வலியை, இழப்பை தருகிறதோ அதே அளவுக்குத்தான் அதிமுக அரசுக்கும் தந்துள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications