அண்ணாமலைக்கு பதவியா?.. பாஜகவில் உள்குத்து.. எஸ்.ஆர். சேகர் போட்ட ட்வீட்டால் சர்ச்சை
சென்னை: தமிழக பாஜக நிர்வாகி எஸ் ஆர் சேகரின் ட்வீட்டை பார்த்தால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதவி தர போகிறார்கள் என்பது தெரிகிறது.
தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்று பாஜகதான் என பாஜக தலைவர் அண்ணாமலை முதல் பெரும்பாலான தலைவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் திமுக வெர்சஸ் பாஜக என்ற சூழலை உருவாக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.
நீட் தேர்வு, ஆளுநர் விவகாரம் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் திமுக- பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளிப்பதும், பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக பதிலடி கொடுப்பதும் என இருக்கிறது.

பாஜக தலைவர்
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தெலுங்கானாவில் சிங்கமலை என அழைக்கும் அளவுக்கு அவருக்கான டிமான்ட் உள்ளது. எங்கு பார்த்தாலும் தமிழக அண்ணாமலை பற்றி மற்ற மாநில பாஜக தலைவர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம்
அவர் அங்கு யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்ற அண்ணாமலை கொழும்புவிலிருந்து 182 கி.மீ. தூரத்தில் இருக்கும் பழமையான சீதையம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.

இலங்கை தமிழர்கள்
இந்த நிலையில் அண்ணாமலை இலங்கை தமிழர்களின் தலைவரான விக்னேஸ்வரனை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் இன்று "ராஜ முத்திரை " இல்லாத சந்திப்பு, விரைவில் "அசோக முத்திரையுடன் " சந்திப்பு. இலங்கை தமிழர் தலைவர் ஐயா விக்னேஸ்வரனுடன் இளைய தலைவர் அண்ணாமலை என ட்வீட் போட்டுள்ளார்.

அசோக முத்திரை
அசோக முத்திரை என்றால் அரசு பதவிகள் கொடுத்தால் மட்டுமே அதை பயன்படுத்த முடியும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஆளுநர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த அசோக முத்திரையுடன் கூடிய தேசியக் கொடியை தங்களது வாகனத்தில் பொறுத்திக் கொள்வர். அப்படியென்றால் அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன்
ஏற்கெனவே தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் எம்பியாகி அமைச்சராகியுள்ளார். அவரை போல் அண்ணாமலையும் மாநிலங்களவை எம்பியாக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இல்லாவிட்டால் இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராகவும் தமிழிசை தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராக உள்ளது போல் அண்ணாமலைக்கு ஆளுநர் பதவி ஏதேனும் கொடுக்கப்படுகிறதா என தெரியவில்லை. ஆனால் எஸ் ஆர் சேகரின் ட்வீட்டை பார்த்தால் ஏதோ ஒரு பதவி கன்பார்ம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன?












Click it and Unblock the Notifications