"புளியில் பல்லி இருக்கு".. அடுத்த பகீரை தூக்கி போட்ட எச்.ராஜா.. திமுக மீது பாய்ச்சல்
திமுக அரசை எச்.ராஜா சரமாரி விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி என்றும், பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களில் உள்ள புளியில் பல்லி இருந்திருக்கிறது, அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.. எனவே இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எச்.ராஜா முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் தொடர்ந்து திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.. இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டி வருகிறார்.
அத்துடன் இந்து கோவில்களில் அறங்காவலர்கள் குழுத் தேர்வு மற்றும் இந்து கோவில்கள் மேம்படுத்துதல், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையின் உண்மையை அறிவிக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

டிரஸ்ட்டி
சில தினங்களுக்கு முன்புகூட இது சம்பந்தமாக அவர் பேட்டி ஒன்றில் "கோவிலில் உள்ள தங்கத்தை டிரஸ்டி இல்லாமல் உருக்க முடியாது... அறங்காவலர் இல்லாமல் எந்த செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது... எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக் கூடாது என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் அறங்காவலர் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உண்மை தன்மை இல்லை...

இணையதளம்
நீதிமன்ற தீர்ப்பின் படி, பாரம்பரிய கோவில்களில் அறங்காவலருக்கு தான் முன்னுரிமை. எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக சேகரிக்கப்படும் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையில் பக்திமானாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மாறாக கோவில்களில் இருக்கும் நிதியை சுரண்டும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.

ஸ்டாலின்
நான் முதல்வர் ஸ்டாலினுக்கு விரோதமானவன் அல்ல. ஆனால் அவருடைய தலைமையில் செயல்பட்டு வரும் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசிற்கு எதிராக தான் குரல் கொடுத்து வருகிறேன். கிறிஸ்துவ மிஷினரிகள் கைக்கூலியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற கோவில்களை நிர்ணயிக்க, அரசிற்கு திறமையில்லை" என்று கூறியிருந்தார்.

எச்.ராஜா
இந்நிலையில், இன்று மீண்டும் திமுக அரசை எச்.ராஜா விமர்சித்துள்ளார்.. கரூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது... இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி... பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களில் உள்ள புளியில் பல்லி இருந்திருக்கிறது.. அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.. எனவே இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications