கொளுத்தி போட்ட சு.சாமி.. "அவங்க தாத்தாக்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போகல".. பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் விவகாரம் குறித்து சு.சாமி சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்
சென்னை: ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் தேசிய அளவில் அனலடித்து கொண்டிருக்கும்போது, சுப்பிரமணியன் சுவாமி, சொன்ன கருத்து, மேலும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
கர்நாடகவில் ஆரம்பித்த ஹிஜாப் விவகாரம் இன்னும் அடங்கவில்லை.. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை அது ஏற்படுத்தி வருகிறது.
ஏன் ஏமாத்திட்டீங்க.. கூவத்தூர் போய் அவரை மாதிரி.. சேலத்துக்கே போய் எடப்பாடியை சீண்டிய உதயநிதி
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா ஹைகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகின்றது... 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு மீண்டும் கர்நாடகாவில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கல்லூரி
அப்போது, ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப்பை கழற்றிய பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர்... ஆனால், கர்நாடகாவில் உள்ள ஷிவமோக கல்லூரியில் மட்டும், 30 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் வருவோம் என்று உறுதியாக தெரிவித்து, வகுப்பையும் புறக்கணித்தனர்... இப்படி கல்வி நிறுவனங்களில் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

சுப்பிரமணியன் சுவாமி
மற்றொரு புறம் அரசியல் கட்சி தலைவர்கள் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.. இதில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.. தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2 ட்வீட்களை சு.சாமி பதிவிட்டுள்ளார்..

தாத்தாக்கள்
அதில், எப்படி இந்த வெறுப்பு? "ஹிஜாப் முதலில்" முஸ்லீம்கள் இந்தியாவில் தங்கி, ஹிஜாப் முதலில் படிக்கும் பாகிஸ்தானைத் தேர்வு செய்யாமல் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டனர். ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம் மாணவிகள் முதலில் ஹிஜாப்பிறகு படிப்பு என்று சொல்லி வருவதை பார்க்கும்போது, இவர்களின் தாத்தாக்கள் பாகிஸ்தானுக்கு செல்லாமல், இந்தியாவை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது" என்று பதிவிட்டிருக்கிறார்.

பரபரப்பு
ஏற்கனவே, ஹிஜாப் விவகாரங்கள் குறித்த பிரச்சனைகளும், சர்ச்சைகளும், விவாதங்களும் தேசிய அரசியலில் அனலை கிளப்பி கொண்டிருக்கும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமியும் தன் பங்குக்கு வந்து, மேலும் சர்ச்சை கருத்தை கூறி கிளப்பிவிட்டு சென்றுள்ளார்.. சாமி சொன்ன இந்த கருத்திற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் எந்தமாதிரியான எதிர்வினை ஆற்ற போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications