முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் கச்சத்தீவு செல்ல வேண்டுமாம்.. சொல்வது பாஜக!
சென்னை: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், "தன் அமைச்சர்களுடன், ஸ்டாலினும் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போது தான், இலங்கை விவகாரத்தில், திமுக தொடர்ந்து நாடகமாடி வருவது தெரியவரும்" என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும் இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 2021 முதல், 106 வெவ்வேறு சம்பவங்களில் 1,482 மீனவர்களும் 198 மீன்பிடிப் படகுகளும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் பெரும் துயரத்தையும் பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீட்பதற்கும், பாக் விரிகுடா பகுதியில் உள்ள நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், மீனவ சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் துயரமான பிரச்சனைகளைத் தீர்க்க இது மிகவும் முக்கியமானது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மீனவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், தங்களின் சுயநலத்துக்காக, மத்தியில் இருந்த காங்கிரசின் முன்னாள் பிரதமர் இந்திராவும், முன்னாள் தி.மு.க தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.
இது, தி.மு.கவினர் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திரும்பத் திரும்ப கூறி நாடகமாகி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார, கடந்த செப்டம்பரில் கச்சத்தீவுக்கு பயணம் செய்தார். அதேபோல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் அல்லாமல், தன் அமைச்சர்களுடன், ஸ்டாலினும் கச்சத்தீவு செல்ல வேண்டும்.
இலங்கை மக்கள், ஸ்டாலினை பார்த்து, 'உங்கள் தந்தை கருணாநிதி, எங்களுக்கு கொடுத்த கச்சத்தீவை, நீங்கள் வந்து கேட்கிறீர்களே; இது, உங்களுக்கே நியாயமா' என்று கேட்பர். அப்போது தான், இலங்கை விவகாரத்தில், தி.மு.க தொடர்ந்து நாடகமாடி வருவது தெரியவரும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications