‘கிங் மேக்கர்’ மீது பயம்.. திமுகவை தனிமைப்படுத்த ‘பிளான்’.. அண்ணாமலை மூலம் அவதூறு.. முத்தரசன் பரபர!
சென்னை : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள திமுகவை தனிமைப்படுத்த பாஜக அண்ணாமலை மூலம் ஊழல் பட்டியல் என வெளியிட்டு அவதூறு பரப்பும் விஷமத்தனத்தில் ஈடுபட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்த நிலையில், ஏப்ரல் 14-ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், கனிமொழி கருணாநிதி, டி ஆர்.பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் விவரங்கள் என வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.

திமுக உடனடி ரியாக்ஷன்: அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, "அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடவில்லை. அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை. திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை 15 நாளில் அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது.
அண்ணாமலை பட்டியலில் வெளியிட்ட அனைவரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வார்கள். அதில் தவறு இருந்தால் யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். ஆனால், எந்த ஆதாரமும் இன்றி பட்டியல் வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு இனி செல்ல நேரிடும்." எனத் தெரிவித்தார்.
வரிந்து கட்டி வந்த கம்யூனிஸ்ட் : இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திமுக தலைவர் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது குற்றச்சாட்டு என்ற பெயரில் சொத்து விபரங்களை செய்தியாக வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி வரும் 2024ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்து அகற்ற, எதிர்க்கட்சிகளை அணிதிரட்டி ஒருங்கிணைத்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், அவரது கட்சியினரையும் மிரட்டி நிர்பந்திக்கும் முயற்சியின் வெளிப்பாடு.

பாஜகவின் வழக்கம்: ஜனநாயகத்தை பாதுகாக்க இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்தியுள்ள அமைப்புகளான வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை ஏவி எதிர்கட்சித் தலைவர்கள் மீது சோதனைகளும், விசாரணைகளும் நடத்தி அவர்களை மோசமானவர்களாக மக்கள் முன் நிறுத்துவது ஆர்எஸ்எஸ், பாஜகவின் வழக்கம்.
கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த முஸ்லிம் இன அழிப்பு தாக்குதலில் மோடி அரசின் கரம் இருப்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டதும், மோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குச் சந்தை கணக்கியல் மோசடிகளுக்கு துணை போன குற்றச்சாட்டின் மீது கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததை அனைவரும் கண்டித்து வருகிறோம்.
திமுகவை கார்னர் செய்ய : நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி அன்றாடம் அமளி, துமளியாக்கி ஜனநாயக நடைமுறைகளை நிராகரித்ததும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி பறிக்கப்பட்டதையும் நாடு ஒருமுகமாக கண்டித்து வருகிறது. பாஜக அரசின் மீது நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலிமை பெற்று வரும் நிலையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.
சமூக நீதி ஜனநாயக கொள்கை அடிப்படையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்க திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள் பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பாஜக ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியலமைப்பு நிறுவனங்களை கருவிகளாக்கி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள திமுகவை தனிமைப்படுத்த பாஜக அண்ணாமலை மூலம் அவதூறு பரப்பும் விஷமத்தனத்தில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தேர்தல் ஆதாயம் தேடும் மலிலான செயலுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து தீவிரமாக களமிறங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார் முத்தரசன்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications