மோடிஜியும் அதை விருப்பவில்லை.. சென்னைக்கு வராதது ஏன்? பிரஸ்மீட்டில் எமோசனலான அண்ணாமலை
சென்னை: பிரதமர் மோடி தான் சென்னைக்கு வர வேண்டாம் என்று என்னிடம் சொன்னார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி சென்னைக்கு வந்த போது, பாஜக மாநில தலைவரான அண்ணாமலை வரவில்லை. மத்திய அமைச்சர் எல் முருகன் தான் டெல்லியில் இருந்து வந்திருந்தார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அப்போது நடைபெற்றுவந்தது. அதன் காரணமாகவே அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரதமர் கலந்துகொண்ட சென்னை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று அப்போது செய்திகள் வெளியாகின.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் டெல்லி மேலிடத்தின் உத்தரவு காரணமாக அண்ணாமலை டெல்லியிலேயே இருந்ததாகவும் கூறப்பபட்டது. ஆனால் பிரதமர் மோடி வந்த போது அண்ணாமலை வராதததை இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தனர்.
அண்ணாமலையை பாஜக மேலிடம் ஓரம்கட்டிவிட்டதாக செய்திகளும் பரவின. அமைச்சர் எல் முருகன் தான் டெல்லியில் இருந்து வந்திருந்தார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் எல் முருகன் பங்கேற்றிருந்தார். இது ஒருபுறம் எனில் எடப்பாடி பழனிசாமி விவகாரத்தில் அண்ணாமலை மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும் சிலர் செய்திகளை பரப்பிவிட்டனர்.
ஆனால் இவை அனைத்தும் வதந்தி என்று பாஜக தரப்பினர் விளக்கம் அளித்தனர். பாஜக மேலிடம் அண்ணாமலையை முழுமையாக நம்புவதாகவும் கூறினார்கள். பல பிரச்சனைகள் வந்த போதும், டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு முழு ஆதரவு அளித்ததையும் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் பிரதமர் மோடி தான் சென்னைக்கு வர வேண்டாம் என்று என்னிடம் சொன்னார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதனிடையே திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணமாலை சென்னைக்கு வரவில்லை. அண்ணாலை மீது மோடிஜிக்கு கோபம். மோடிஜி அண்ணமலையின் கண்ணை பார்க்கவில்லை. கூட இருந்து மோடிஜியிடம் கைகளை கொடுப்பதற்காக அண்ணாமலை வரவில்லை. எங்கோ இருக்கின்ற தொண்டனை கொண்டு வந்து மோடியின் கைகளில் கொடுப்பதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். மோடிஜியை தினமும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் மோடிஜியை பார்ப்பதற்கு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. மோடிஜியும் அதை விருப்பவில்லை. என்னுயை ஆசை லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து மோடிஜியின் வாழ்க்கையையே பார்க்கும் படியாக என் இடத்தை கொடுக்க வேண்டும் என்று யோசிப்பவன் நான். இதை எல்லாம் ஏன் இப்படி தைரியமாக பேசுகிறோம் அப்படீன்னாங்க.. எதற்கும் துணிந்து தான் இந்த அரசியலுக்கு வந்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை நான் ஒரு விதத்தில், நம் பத்திரிக்கை நண்பர்களிடம் சொன்னது போல், இரண்டு மாதங்களாக நான் கொஞ்சம் உட்காரமுடியவில்லை. இந்த அரசியல் நமக்கு சரிபட்டு வராது. மாலையை போட்டு, கும்பிடு போட்டு எலக்சன் அப்ப ஒன்றாக சேர்ந்துகிட்டு ஒரு விஷயத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அடிப்படையில் இருந்து எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். நீங்கள் பார்த்த டிஎம்கே பைல்ஸ் பார்ட் ஏ உடன் நிற்கபோவது இல்லை, தமிழ்நாட்டில் இதுவரை எந்தெந்த கட்சியில் ஆட்சியில் இருந்ததோ அத்தனை கட்சிகளின் ஊழலும் வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை மேலும் கூறுகையில், இங்கு எப்படி வெற்றி பெறலாம் என்று அரசியல் நடக்கிறதே ஒழிய, தமிழனை மையமாக வைத்து நடைபெறவில்லை. இவர்கள் செய்யக்கூடிய அரசியல், பாழ்பட்ட அரசியல், தமிழர்களுக்கு நல்லது செய்யும் அரசியல் இல்லை. இங்கு இருப்பது பணத்தை வாங்கி கொண்டு,பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்படி வெற்றி பெறலாம் என்று அரசியல் நடக்கிறதே தவிர, தமிழனை மையமாக வைத்து அவனை எப்படி உயர்த்துவது என்று அரசியல் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டினார்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications