Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘முட்டை’யில் இருந்த மார்க்.. முறைகேடு அம்பலம்! “தூக்கத்துல இருந்து எழுந்திருங்க கீதாஜீவன்”: அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் தூக்கத்தில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் விழித்துக்கொண்டு, தனது துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு ஹோட்டலில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள், முத்திரையுடன் அங்கு இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தனியார் ஹோட்டலில் அரசு வழங்கும் சத்துணவு முட்டைகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BJP state president Annamalai slams Minister Geetha Jeevan on egg scam

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். நல்ல முட்டைகளை தனியார் உணவகங்களுக்கு விற்று விட்டு, குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அழுகிய முட்டைகள் வழங்குவதாக திமுக அரசை சாடியுள்ளார் அண்ணாமலை. மேலும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை வழங்கியதை, தமிழ்நாடு பாஜக பல முறை கண்டித்துள்ளது. எனினும், மாணவர்களுக்குத் தரமான முட்டைகள் வழங்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், அதைக் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார் அமைச்சர் திருமதி. கீதாஜீவன். தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில், தனியார் உணவகத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய, அரசின் சீல் வைக்கப்பட்ட முட்டைகள் இருந்த செய்தி வெளிவந்துள்ளது.

தரமான முட்டைகளை தனியார் உணவகங்களுக்கு விற்று விட்டு, குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அழுகிய முட்டைகள் வழங்குவதைச் சற்றும் ஏற்க இயலாது. உடனடியாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் தூக்கத்தில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் விழித்துக்கொண்டு, தனது துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+