ஒரே கூட்டணி, தலைமையை முடிவு செய்துவிட்டு.. ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கலாமா?.. எஸ்ஆர் சேகர் கேள்வி
சென்னை: ஒரே கூட்டணி ஒரே தலைமையை முடிவு செய்துவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கலாமா என்று பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளதாவது: அரசமைப்பு சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 ஆவது ஆண்டில் பாராளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தில் இண்டி கூட்டணியின் முகத்திரை கிழிக்கப்பட்டதில் இருந்து அவர்களின் பதற்றம் வெளிப்பட தொடங்கியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால் மாநிலக் கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படும் என்று கூறுகிறார் ஸ்டாலின்.

கடந்த 20 வருடங்களாக ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாகத்தான் நடக்கிறது. இந்த முறைதான் மத்தியில் வெற்றி பெற்ற கட்சி, மாநிலத்திலும் ஆட்சி அமைக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் 2019 ஒரே சமயத்தில் தானே பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது?. அதில் என்ன, மத்தியில் வெற்றி பெற்ற கட்சியே மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டதா?.
கும்மிடிப்பூண்டி தாண்டினால் ஒரு உலகம் இருக்கிறது என்று புரியாத ஸ்டாலின் அவர்களுக்கு, 1996 இல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும், இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஒருவேளை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் எத்தகைய கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும் என்பதால் எதிர்க்கிறாரோ என்னவோ?.
இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க காங்கிரசுக்கு திறமை இல்லை என்ற குரல் இப்பொழுதே அந்த கூட்டணிக்குள் எழ ஆரம்பித்துவிட்டது. பார்டர் விட்டு பார்டர் தாண்டினால் கூட்டணியில் டிசைனும் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வந்து விட்டால் எந்த டிசைனில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும் என்பதால், இண்டி கூட்டணியினர் இந்த மகத்தான திட்டத்தை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு சாமானிய மனிதனும் தேசத்திற்கு செலுத்தும் வரிப் பணத்தை வீணாக்கக்கூடாது என்று நோக்கத்தில் கொண்டுவரப்படும் இந்த உன்னத திட்டத்தை முழு மனதோடு வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications