Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பிச்சாச்சு.. நேருவை வம்பிழுத்த சுப்பிரமணிய சாமி.. ஒருத்தருக்கும் துணிச்சல் இல்லை.. பரபர ட்வீட்

தேவர் ஜெயந்தியையொட்டி சுப்பிரமணிய சாமி ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசும்பொன் தேவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க ஒரு எம்பிக்கு கூட துணிச்சல் இல்லை... ஆனால் நான் வைத்தேன்" என்று பாஜகவின் சுப்பிரமணியன் சாமி ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியை பொறுத்தவரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது மிகுந்த மரியாதையை வைத்திருப்பவர். அவரது சுதந்திர போராட்டத்தை பற்றி பலமுறை செய்தியாளர்களிடம் சிலாகித்து பேசியவர்.

2002-ல் நாடாளுமன்ற வளாகத்தில் பசும்பொன் தேவருக்கு சிலை வைக்கப்பட்டது.. இதற்கு மூல காரணமே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணியசுவாமிதான்..

 தேவர் சிலை

தேவர் சிலை

சமூக சீர்திருத்தவாதியும், தலித்துகள் கோவிலுக்குள் நுழைய அனுமதி பெற்றுத் தந்தவருமான தீரர் சத்தியமூர்த்தி மற்றும் தேசவிடுதலைக்காகப் போராடிய நேதாஜியின் ராணுவத்துக்கு பல உதவிகள் புரிந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின் சிலைகளை நன்கொடையாக சுப்பிரமணிய சுவாமி அப்போது வழங்கினார்.

 மதுரை ஏர்போர்ட்

மதுரை ஏர்போர்ட்

இதன்விளைவாகவே, நாடாளுமன்ற வளாகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஆளுயர வெண்கல சிலை வைக்கப்பட்டது... இந்த சிலையை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார். அதேபோல, மதுரை ஏர்போர்ட்டிற்கும் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்து வருகிறார்.

கடிதம்

கடிதம்

கடந்த 2016-ல் பிரதமர் மோடிக்கு, இதற்காகவே பிரத்யேகமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அதில்கூட, மதுரை விமான நிலையத்துக்கு தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல, 2018-ல் மாநிலங்களவையிலும் சுப்பிரமணிய சுவாமி மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

 மரியாதை

மரியாதை

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வருட தேவர் ஜெயந்திக்கும், மாநிலங்களவையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார். அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் 59வது நினைவு நாள் ஆகியவை குரு பூஜையாக இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சுப்பிரமணிய சுவாமி தினமும் அஞ்சலி செலுத்தினார்.. அந்த சிலை அருகே ஒரு போட்டோவும் எடுத்து கொண்டார்.. அந்த போட்டோவுடன் சேர்த்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் சுப்பிரமணிய சாமி..

 நேரு

நேரு

அதில், "இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் வீரர் தேவர்... நேருவின் தூண்டுதலால் அவர் மீது பொய்யான கொலை வழக்கு போடப்பட்டது.. நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தேவர் ஆதரித்தார் என்பதால், இந்த பொய் வழக்கு புனையப்பட்டது.. ஜெயிலில் இருந்தபோது அவருக்கு ஜாமீன் கூட தர மறுத்துவிட்டனர்.. அதன்காரணமாகவே அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க ஒரு எம்பிக்கு கூட துணிச்சல் இல்லை... ஆனால் நான் வைத்தேன்" என்று அதில் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+