பள்ளம் தோண்டும் பாஜக.. விஜய் விழுவாரா? கரூரை வைத்து ‘மேலிடம்’ போடும் ப்ளான்.. இப்படி ஒரு திட்டமா?
சென்னை: கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை என்டிஏ கூட்டணி அமைத்து கரூருக்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவினர் ஆய்வு நடத்திய நிலையில் விஜய் அவர்களை சந்தித்து பேச வேண்டுமென பாஜக கூறியிருக்கிறது. இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக பாஜக இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சிகர்கள், மேலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு விஜய் அழைக்கும் முயற்சி இது என்றும் கூறுகின்றனர்.
த.வெ.க. தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரச்சார நிகழ்வில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் தற்போது 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல்
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறை தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிகழ்ச்சி ஏற்பாட்டில் நேரடியாக ஈடுபட்டிருந்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் இணை செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
41 பேர் பலி
இதில் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்தல், கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகளை மீறல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஹேமமாலினி எம்பி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை என்டிஏ கூட்டணி அமைத்து கரூருக்கு அனுப்பி வைத்தது. இந்த குழுவில் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் நிலையில் நேற்று கரூரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கண்ட பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.
பாஜக ஆய்வு குழு
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹேமமாலினி, விஜய் மீது தவறு இல்லை, தமிழக அரசு மீதும் காவல்துறையின் மீதும் தான் தவறு இருப்பது போல பேசி இருந்தார். ஏற்கனவே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் விஜய் மீது தவறில்லை என்ற தொனியிலேயே பேசி வருகின்றனர். இதற்கிடையே பாஜக அமைத்த உண்மை கண்டறியும் குழுவை விஜய் சந்தித்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக வைத்திருக்கிறது.
ஹேமமாலினி குழு
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," உண்மை கண்டறியும் குழுவை விஜய் சந்தித்து பேச வேண்டும் 41 குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வதற்கான முயற்சியில் விஜய் பங்கேற்க வேண்டும் என கூறியிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என பல மாதங்களாகவே பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால் கொள்கை எதிரி பாஜக தான் என திட்டவட்டமாக கூறியுள்ள விஜய் பாஜக கூட்டணிக்கு செல்ல போவதில்லை என சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் கரூர் சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதனை வைத்து விஜயை காப்பாற்றி, 2026 தேர்தலுக்கு கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி!












Click it and Unblock the Notifications