• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

திடீர்னு என்னாச்சு .. வானதி ஏன் இப்படி பேசறார்.. ஸ்டாலினுக்கு வெள்ளை கொடியா.. பரபரக்கும் அரசியல்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பூசி டோக்கனை பறித்து திமுகவினர் அராஜகம் செய்கிறார்கள்.. அதனால், திமுகவினர், முதல்வர் ஸ்டாலினின் கருத்தை மதிக்க வேண்டும் என்று வானதி சீனிவான் அட்வைஸ் தந்துள்ளர்.. இதுதான் இன்றைய தமிழக அரசியலில் பெருத்த விவாதத்தை கிளப்பி விட்டு வருகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மருத்துவ அணி தலைவர் காளிதாஸ் கொரோனாவால் பலி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மருத்துவ அணி தலைவர் காளிதாஸ் கொரோனாவால் பலி

இப்போதைக்கு தமிழகத்திலே கோவை மாவட்டத்தில் அதிகப்படியாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் மட்டும் 2,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை பாதிப்பு அதிகமாகிவிடவும், கடந்த சில வாரங்களாகவே தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது.. இந்நிலையில், நேற்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் அங்கு தொடங்கியுள்ளன.

 வெள்ளக்கிணறு

வெள்ளக்கிணறு

அந்த வகையில், வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.. எனவே, விடிகாலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த திமுக சரவணம்பட்டி பொறுப்பாளர் அருள்குமார், "தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை நாங்கள்தான் தருவோம்" யார்கிட்ட வேணும்னாலும் புகார் கொடுத்துக்கோங்க. எனக்கு பயமில்லை" என்று சொல்லி அங்கிருந்த மருத்துவ குழுவினரிடம் வாக்குவாதம் செய்தார்..

பரபரப்பு

பரபரப்பு

திமுக பிரமுகரின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோலவே, கோவையின் சில பகுதிகளில், நாங்கள்தான் டோக்கன் தருவோம் என்று திமுகவினர் அடாவடி செய்துள்ளனர். இந்த விஷயத்தில்தான், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலையிட்டுள்ளார்.. இதுசம்பந்தமாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளர்..

பதிவு

பதிவு

அதில், "இம்மாதிரி பல்வேறு இடங்களில் ஆளும்கட்சியினர் தலையீடு அதிகரித்துக்கொண்டுள்ளது . அனைவரும் இணைந்து இக்காலகட்டத்தில் பணியாற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களது கருத்தை சொந்த கட்சியினர் மதிக்க அறிவுறுத்தவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

கோவை

கோவை

கடந்த சில நாட்களாகவே, திமுகவுடனான மோதல் போக்கு வானதிக்கு ஏற்பட்டு வருகிறது.. கொரோனா தடுப்பு பணிகளில் கோவையை திமுக புறக்கணிக்கிறது, தடுப்பூசி கொடுப்பதில் மக்களை புறக்கணிக்கிறது, கோவையை கண்டுகொள்வது இல்லை என்று பலவாறாக விமர்சனங்களை முன்வைத்து கொண்டே இருந்தார்.

 புறக்கணிப்பு

புறக்கணிப்பு

முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.. ஆனாலும் வானதியின் இந்த குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின், சற்று டென்ஷன் ஆனதாகவும் தெரிகிறது.. "நாங்க எதுக்கு புறக்கணிக்கணும்?" என்று கூறி வானதிக்கு பதிலடி தந்தார்.. அதற்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் பதிலடி தந்தார்..

  ஏதோ காரணம் இருக்கு..! Kalaignar-ஐ புகழ்ந்து தள்ளிய Mahendran
  வானதி

  வானதி

  எனினும், அடுத்த பிரச்சனையை வானதி கையில் எடுத்து, திமுகவுக்கு அட்வைஸ் தந்துள்ளார்.. இது இரண்டுவிதமான விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது. ஒன்று, விடாமல் திமுகவை வானதி விமர்சித்து வருகிறார், தேவையில்லாமல் சீண்டுகிறார் என்று ஒரு தரப்பு சொல்கிறது..

   விவாதம்

  விவாதம்

  மற்றொன்று, ஸ்டாலினின் பேச்சை மதித்து நடக்கும்படி, திமுகவினருக்குதான அட்வைஸ் செய்திருக்கிறாரே தவிர, ஸ்டாலினை அவர் குறை சொல்லவில்லை.. எனவே, இந்த 4 நாட்களாக திமுகவுடன் கடைப்பிடித்து வந்த மோதல் போக்கு, தற்போது வானதியிடம் குறைந்துள்ளதாக இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.. அந்த வகையில் வானதியின் இந்த ட்வீட்டும், சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி விட்டு வருகிறது..!

  English summary
  BJP Vanathi Srinivasan talk about dmk MK Stalin
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X