Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
Mithunam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு தைரியம் ஏற்படும். அரசு கெளரவங்கள் ஏற்படும் காலகட்டம். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அதீத கவனம் அனுகூலத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும்.
சுபகாரியம்
குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். துணை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பிற மொழி பேசும் நபர்களால் நிறைய ஆதாயங்கள் உண்டாகும். தெய்வ காரியங்களைச் செய்வீர்கள். கோவில் திருப்பணிகளைச் செய்து மகிழ்வீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெயர் புகழ் கூடும்
நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். பெயர், புகழ் ஏற்படும். காலகட்டம். தியானங்கள், யோகா, மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்வீர்கள். ஆன்மீக பெரியவர்களை சந்திக்கும் அமைப்பு உள்ளது. வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. முதலீடுகளில் சிக்குவது, பணத்தைக் கொடுத்து சிக்குவது போன்ற அமைப்பு உள்ளது.
முன்னேற்றம்
லாபத்தில் செவ்வாய் இருப்பதால் அதிகாரம் கைக்கு வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, கால் முட்டி, பாதத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். நினைத்த காரியங்கள் கைகூடும். தொழிலில் முன்னேற்றம் அபரிமிதமானதாக இருக்கும். வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. தேவையில்லாத அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
வழிபாடு
தூக்கமின்மை ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். மற்றபடி எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதாரம் 75 சதவீதமும் நன்றாக இருக்கும்.
-
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications