அந்தரங்க உறுப்பில் ‘இரும்பு ராட்’.. கர்ப்பிணி மனைவிக்கு தொழிலாளி கொடுத்த தண்டனை.. கொடூரத்தின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்ப பிரச்சனையில் கர்ப்பிணி மனைவி என்று கூற பாராமல் கணவர் கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காமல் அந்தரங்க உறுப்பில் இரும்பு ராடை சொறுகி சித்ரவதை செய்த சம்பவம் நடுங்க வைத்தள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சகாரியா கிராமத்தை சேர்ந்தவர் ஹிராபாய். இவருக்கு வயது 23. இவரது கணவர் பெயர் பிரதீப் அகரியா. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளன.

chhattisgarh crime

குழந்தை மகனுக்கு 4 வயது ஆகிறது. 2வது மகனுக்கு 3 வயது ஆகிறது. அடுத்ததாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ஒன்றரை வயது ஆகிறது. இதற்கிடையே தான் மீண்டும் ஹிராபாய் கர்ப்பமானார்.

இறந்துபோன மனைவி

இந்நிலையில் தான் கடந்த 14ம் தேதி கணவர் பிரதீப் அகரியா தனது மனைவி ஹிராபாயை, அம்பிகாபூரி்ல் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மனைவி ஹிராபாய் விபத்தில் சிக்கியதாகவும், அவரை காப்பாற்றும்படியும் மருத்துமனையில் சேர்த்தார். டாக்டர்கள் ஹிராபாயை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதோடு பிரேதப் பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதை கேட்டவுடன் பிரதீப் அகரியா மாயமானார்.

அந்தரங்க உறுப்பில் இரும்பு ராட்

ஹிராபாய் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. ஹிராபாயின் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பது தெரியவந்தது. தலை உள்பட 18 இடங்களில் பெரிய அளவில் காயங்கள் தென்பட்டது. அதோடு அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி இப்பதும், இதனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்திருப்பதும் தெரியவந்தது. இதனால் அந்த பெண் விபத்தில் பலியாகவில்லை. கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

என்ன நடந்தது?

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் பிரதீப் அகரியாவை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் கூறுகையில், ''தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர். கடந்த 14ம் தேதி 4 குழந்தைகளும் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த பிரதீப் அகரியா, மனைவி ஹிராபாயை கொலைவெறியில் ஆக்ரோஷமாக தாக்கி உள்ளார்.

பைக்கில் கட்டி வந்து நாடகம்

கர்ப்பிணி என்று கூட பராமல் கொடூரமாக தாக்கி உள்ளார். அந்தரங்க உறுப்பில இரும்பு ராடை சொருகி சித்ரவதை செய்துள்ளார். இதில் ஹிராபாய் இறந்துவிட்டார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது. பிறகு கொலையை மறைக்க அவர் மனைவி ஹிராபாய் விபத்தில் சிக்கியதாக கூறி நாடகமாடி உள்ளார். ஹிராபாய் வீட்டில் இறந்திருந்தாலும் கூட அவரது உடலை பைக்கில் கட்டிவைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளார். தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை விரைவில் கைது செய்வோம்'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+