தடையை மீறி மீண்டும் பாஜகவின் வேல்யாத்திரை- சென்னை திருவொற்றியூரில் போலீஸ் குவிப்பு!
சென்னை: தமிழக அரசின் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மீண்டும் வேல்யாத்திரையை தொடங்க உள்ளதால் சென்னை திருவொற்றியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளுக்கான வேல் யாத்திரையை நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை நடத்துவதாக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இந்த தடையை மீறி திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையை நடத்த முருகன் முயற்சித்ததால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வேல் யாத்திரைக்கான தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் தடையை நீக்க மறுத்தது; இந்த வழக்கின் விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் இருந்து இன்று வேல் யாத்திரையை தொடங்குவதாக முருகன் அறிவித்தார்.
இதனையடுத்து சென்னை திருவொற்றியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசின் தடையை மீறி வேல்யாத்திரை சென்றால் பாஜகவினரை கைது செய்து அழைத்துச் செல்ல போலீஸ் வேன்களும் தயார் நிலையில் இருக்கின்றன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications