காக்கா கூட்டத்தை பாருங்க ஒண்ணா இருக்க கத்துங்கங்க! செல்லூர் ராஜுவுக்கு கரு.நாகராஜன் கொடுத்த அட்வைஸ்!
சென்னை : பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம் எனவும் அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம் என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில் காக்காக் கூட்டத்தப் பாருங்க ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற பாடலை மறந்து விட்டார் என பாஜக மாநிலத் துணைத் தலைவரான கரூர் நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், "எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜக தொடர்ந்து தமிழகத்திற்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருவதாகவும் அதிமுகவில் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேசக்கூடிய ஒருவர் கூட இல்லை என கூறினார்.
அதிமுகவில் ஆண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என என நாயனார் நாகேந்திரன் பேசியது கட்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக தொண்டர்கள் நயினார் நாகேந்திரன் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

செல்லூர் ராஜு பேச்சு
இதையடுத்து இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது பொன்னையன் இன் பேச்சு பாஜக அதிமுக இடையே பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அதிமுகவை மீறி பாஜக செயல்படுவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என அவர் கூறியிருந்த நிலையில் அது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் இத்தோடு முடிந்து விட்டது என நினைத்த போதுதான் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தார் அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜு.

பாரதிய ஜனதா கட்சி
கடந்த ஆட்சிக்காலத்திலும் சரி எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி தனது அதிரடி பேச்சுக்களின் மூலம் பல பல விஷயங்களை கூறி பெரும் விவாதத்தை உண்டுபண்ணும் செல்லூர் ராஜூ இந்த முறை பெரும் மோதலை உருவாக்கி விட்டார் என்று தான் கூற வேண்டும். அப்படி என்னதான் பேசினார் செல்லூர் ராஜு?. மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு," பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது.

பாஜகவின் காக்கா கூட்டம்
இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும்.சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம்" என பேசியிருந்தார். வெளிப்படையாக அதிமுகவினர் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களில் பெரும்பாலான அதிமுகவினர் செல்லூர் ராஜுவின் இந்த பேச்சு வரவேற்கத்தக்கது எனவும் அதிமுகதான் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறிவந்தனர்.

கடும் கண்டனம்
ஆனால் அதே நேரத்தில் செல்லூர் ராஜுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது இது குறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் செல்லூர் ராஜுவின் பேச்சினை கண்டித்து வருகின்றனர் இது குறித்து பேசியுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவரான கரு. நாகராஜன்," காக்கையின் மகத்துவம் செல்லூர் ராஜூ புரியாது நமது மூதாதையர்கள் எல்லாம் பகையாக இருப்பதால் தான் எல்லா சாமியையும் கும்பிடும்போது காக்காவுக்கும் சாப்பாடு வைத்துவிட்டு சாப்பிடுவார்கள்.

கரு. நாகராஜன் கருத்து
காக்காவை மட்டமாக பேசக்கூடாது. பல கட்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கும் காக்கா கூட்டம் பாஜகவில் இல்லை. காக்கா கூட்டத்தப் பாருங்க. ஒண்ணா இருக்க கத்துக்கனும் என்ற பாடல் உள்ளது. அதை செல்லூர் ராஜு மறந்துவிட்டார். நாங்கள் விரட்டி விட்டதும் ஓடும் காக்கா கூட்டம் அல்ல. செல்லூர் ராஜூ பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகளை வருத்தம் தெரிவித்தனர். இனிமேல் அவர் அப்படிப் பேசக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications